அந்த ரகப் பாடலில் இளையராஜாவை விட்டா வேற யாருமில்லே… அப்பவே இப்படி மியூசிக் போட்டுருக்காரே!

by sankaran v |   ( Updated:2025-05-08 00:59:00  )
ilaiyaraja
X

ilaiyaraja

Ilaiyaraja: இளையராஜா கிராமத்துக் காமத்துக்கான பாடலை அந்தக் காலத்தில் எப்படி பண்ணினார்? அதுல ஒரு பாட்டைப் பற்றிப் பார்ப்போம். இந்தப் பாட்டுல 2 சிறப்புகள் இருக்கு. அது என்னன்னு பார்க்கலாம்.

இசையில ஒருவகை காமத்துக்கான கூறுகளைப் பண்றதுல இளையராஜா கில்லாடி. அதுல 100க்கு 100 சதம் வெற்றி அடைந்தது இவரது பாடல்தான். இவருக்கு முன்னர் வெற்றி அடைந்தது எம்எஸ்வி. அதுவும் ஒரு சில பாடல்கள்தான்.

ஆர்.செல்வராஜ் இயக்கத்தில் பொண்ணு ஊருக்கு புதுசு படம் 1979ல் வெளியானது. இளையராஜா இசையில் சுதாகர், சரிதா நடித்த படம். மாறுபட்ட கதையாக வந்த படம். பண்ணைப்புரம் என்ற கிராமத்துல 999பேர் தான் இருக்கலாம். ஒரு ஆள் கூட இருந்தா கூட அந்த ஊருக்கு ஒத்துக்காதுன்னு நினைக்கிறாங்க.

அதனால கூடுதலா யாரா இருந்தாலும் ஒண்ணு வெளியூக்கு அனுப்புவாங்க. இல்ல. வெளியூருல படிக்க வைப்பாங்க. இந்த சூழலில் சரிதா அந்த ஊருக்கு குடும்பக்கட்டுப்பாடு அதிகாரியாக வர்றாங்க. அந்த ஊருல செக்கு ஓட்டுற அப்பாவி இளைஞனான சுதாகரைக் காதலிக்கிறாங்க. இது பல கிளைக்கதைகளைக் கொண்டது. இதுல 'சாமக்கோழி கூவுதம்மா'ன்னு ஒரு பாடல்.

எஸ்பி.சைலஜா, இளையராஜா சேர்ந்து பாடியது. எஸ்.பி.சைலஜா இந்தப் படத்துல தான் அறிமுகம். இந்தப்பாட்டு தேன் சொட்டும் ரகம். சரிதா முழுமையான காமத்துல இருப்பாங்க. அப்பாவி கணவர் சுதாகர் எந்த மூடும் இல்லாம இருப்பாரு. அந்த வகையில் கணவருக்கு மூடு வர வைக்கிற பாட்டு இது. இளையராஜா கரகரப்பிரியா ராகத்துல அருமையா இந்தப் பாட்டைப் போட்டுருப்பாரு. இதுல வர்ற கித்தாரும், வயலினும் போடுற மியூசிக் 'ஆகா... இது அதுக்கான பாட்டு'ன்னு சொல்லிடும்.

#image_title

இடையிசையில் பேஸ் கித்தார் வேறு எங்கோ கூட்டிச் செல்லும். ராகத்துடன் பாவம் கொண்டு ஓடி வந்தாய் நீயும் என்று இளையராஜா பாடும்போது பாடலில் மூடு வரும். மூன்றாவது இடை இசையில் வரும் கீ போர்டு மியூசிக், ஸ்ட்ரிங் இசையும் காமத்தை அப்படியே தக்க வைக்கும். இந்தப் பாட்டுக்குள்ள என்ன சிறப்புன்னா கிராமத்து காமத்துக்கு சொல்றதுக்கு இளையராஜா பயன்படுத்தின வித்தியாசமான இசைக்கருவி.

இந்தப் பாட்டுல எடுத்த உடனே வரும் 'ஹோய் ஹோய்'னு சொல்லும் வயலின் இசைக்கருவி தான் இதுல ஹைலைட். இதுதான் கிராமத்துக் காமம்னு 'நச்'சுன்னு சொல்றது. பாட்டுல 3வது சரணத்துல சாமக்கோழி ஏய்னு ஆண் குரல் வரும். பெண் குரல் வெட்கத்துலகூவுதம்மான்னு சொல்லும்போது பேச்சும் அடங்கி இசையும் கொஞ்சம் கொஞ்சமா அடங்கிடும். இதுதான் அடுத்த சிறப்பு. பாட்டை நல்லா கவனித்தால் தெரியும். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story