Good Bad Ugly: 'இளமை இதோ'னு பாடினால் மட்டும் போதாது! ராஜா கிட்ட அனுமதி வாங்கணும் மாமே..வச்சாருல ஆப்பு

laiyaraja
Good Bad Ugly: கடந்த பத்தாம் தேதி உலகெங்கிலும் வெளியானது குட் பேட் அக்லி திரைப்படம். ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள இந்த படம் இன்று வரை மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலை மோதி வருகிறது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக தான் இந்தப் படம் அமைந்திருக்கிறது.
அடிப்படையில் ஆதிக் ஒரு தீவிர அஜித் வெறியன் என அனைவருக்கும் தெரியும். அதனால் ஒரு ரசிகன் அஜித் படத்தை பார்த்து எந்த அளவு கொண்டாடுவான் என்பதை நன்கு அறிந்தவராக ஆதிக் இந்த படத்தை எடுத்திருக்கிறார். ஒரு ரோலர் ஹோஸ்ட் ரைடு என்று சொல்லலாம் .மார்க் ஆண்டனி திரைப்படம் எந்த அளவு ஒரு பரபரப்பான படமாக இருந்ததோ அதைப்போல குட் பேட் அக்லி திரைப்படமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ரசிகர்களை சீட் நுனியில் தான் உட்கார வைத்தது.
அதற்கு ஏற்ற வகையில் ஜிவி பிரகாஷ் இசையும் படத்திற்கு கூடுதல் பலத்தை தந்தது. இதற்கிடையில் படத்தில் ஐந்து விண்டேஜ் பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு பாடலுமே மக்கள் மத்தியில் ஏற்கனவே இடம் பிடித்த பாடல்கள். தற்போதுள்ள ட்ரெண்டிங்கில் அந்த பாடல்கள் இந்த படத்தில் அமைந்திருப்பது மேலும் படத்திற்கு ஒரு பிளஸ் ஆக அமைந்தது.
இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி ஷாக் கொடுத்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. ஏற்கனவே இளையராஜா தன்னுடைய பாடலை தன் அனுமதி இன்றி யாரும் திரைப்படங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் அப்படி பயன்படுத்தினால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அதைப் போல குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அவர் அனுமதி இன்றி மூன்று பாடல்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதனால் 5 கோடி இழப்பீடு தர வேண்டும் இல்லையெனில் வழக்கு தொடரப்படும் என்று கூறியிருக்கிறார் இளையராஜா. ஏற்கனவே இப்படியான செய்திகள் நிறைய வந்திருக்கின்றன. அப்படி இருந்தும் இளையராஜாவிடம் அனுமதி பெற வேண்டும் என படக்குழு ஏன் யோசிக்கவில்லை என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.