படம் நல்லாயில்ல... இதைத் தூக்கிப்போடச் சொல்லு... முதல் மரியாதை படத்தினை மட்டமாக பேசிய இளையராஜா...
முதல் மரியாதை படம் கண்டிப்பாக ப்ளாப் தான் ஆகும் என இளையராஜா தெரிவித்ததாக ஒரு தகவல் இணையத்தில் றெக்கை கட்டி இருக்கிறது.
முதல் மரியாதை:
1985ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் முதல் மரியாதை. பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர். மனைவியின் ஆளுமை பிடிக்காத ஒரு கணவன் அவளுடன் காலத்தை கழித்துக்கொண்டிருக்கின்றார்.
அப்போது அவ்வூருக்கு வரும் தன் மகள் வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதல் வருகிறது. அப்பெண்ணும் அவரை காதலித்து வருகிறார். இந்த செய்தி ஊரில் கசிய அப்பெண் கொலை ஒன்று செய்து விட்டு சிறை செல்கிறார். இதை தாங்காத அந்த மனிதர் அப்பெண் வாழ்ந்த வீட்டிலே இருந்து வெளியில் வந்த அப்பெண்ணை கண்டப்பெண் உயிரை விடுகிறார். அவருடன் அப்பெண்ணும் இறந்து விடுகிறார்.
கதை உருவான பின்னணி:
மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் மிகப்பெரிய கதாசிரியராகப் பணியாற்றியவர் செல்வராஜ். தஸ்தாவெஸ்கி என்ற எழுத்தாளரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையாக கொண்டு இவர் எழுதிய கதையே முதல் மரியாதை. இந்த ஒன்லைனை பாரதிராஜாவிடம் சொன்னபோது அவருக்கும் மிகவும் பிடித்து விட்டதாம். பெங்களூரில் இவருக்கும் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டுக்கொடுத்து கதை எழுத சொல்லி இருக்கிறார்.
40 நாட்களுக்குள் முழு கதையை எழுத்திக்கொடுத்த செல்வராஜ், பாரதிராஜாவை அழைத்து இந்த கதையின் முழுவடிவத்தையும் கொடுத்தாராம். தொடர்ந்து யாரை நடிக்க வைக்கலாம் என யோசனை எழுந்த போது, சிவாஜி வேடத்தில் ராஜேஷ், எஸ்.பி.பி என பலரின் பேர் அடிப்பட்டது. ஆனால், பாரதிராஜாவிற்கு அந்த கதாபாத்திரத்தில் சிவாஜியை நடிக்க வேண்டும் என விரும்பினாராம். இதை தொடர்ந்து அவரிடம் படத்தின் கதையை சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார்கள்.
இளையராஜா செய்த அவமானம்:
விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்த நிலையில், இசையமைப்பாளராக இளையராஜாவை ஒப்பந்தம் செய்தனர். இக்கதையை கேட்ட ராஜா, இதெல்லாம் ஒரு கதையா, இதைத் தூக்கிப்போடச் சொல்லு என கதாசிரியர் செல்வராஜிடம் சொல்லி இருக்கிறார். தீபன் மற்றும் ரஞ்சினியை வைத்து வேறு கதையை பண்ண சொல்லு, இது வந்தால் பாரதிராஜா நிலைமை மோசமாகும் என்றாராம்.
ஆனால் இதற்கெல்லாம் அசராத பாரதிராஜா, ரீக்கார்ட்டிங் மட்டும் பண்ணி தர சொல்லு, இந்த சம்பளத்தை அவரிடம் கொடுத்து விடு என ஒரு கணிசமான தொகையை கொடுத்து விடுகிறார். அப்போதும் சும்மா இருக்காத இளையராஜா, இதை அவரே வைத்துக்கொள்ள சொல். இந்த படம் கண்டிப்பாக நஷ்டம் தான் ஆகும். அப்புறம் என்னிடம் தான் காசுக்கு வருவார் என நக்கல் அடித்து அனுப்பி இருக்கிறார். ஆனால் இதெற்கெல்லாம் பாரதிராஜா அசரவே இல்லை. நம்பிக்கையாக படத்தினை ரிலீஸ் செய்து வெற்றியும் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.