ரஹ்மான், அனிருத் செய்யமாட்டாங்க! ஆனா ராஜா சார் செய்வாரு.. இளையராஜாவின் எதிர்பார்ப்பு இதுதான்

by Rohini |   ( Updated:2025-04-19 08:06:07  )
ilaiyaraja (2)
X

ilaiyaraja (2)

Ilaiyaraja: சமீபகாலமாக இளையராஜாவின் காப்பிரைட்ஸ் பற்றிய பேச்சு தான் அடிபட்டு வருகிறது. அவரை காப்பிரைட்ஸ் ராஜா என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அவர் இந்த மாதிரி காப்பிரைட்ஸ் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என அவருக்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கிறார் தொகுப்பாளர் ஆதவன். அதாவது இந்த பிரச்சனை வருவதற்கு முன்பே தனது ஒட்டுமொத்த இசையையும் ஒரு ஆடியோ கம்பெனிக்கு விற்று இருக்கிறார் இளையராஜா. படங்களில் இவருடைய பாடல்களை பயன்படுத்துகிறார்கள் என்றால் முறைப்படி அந்த ஆடியோ கம்பெனியிடமிருந்து அனுமதி வாங்க வேண்டும்.

அதை குட்பேட்அக்லி பட நிறுவனமும் செய்து இருக்கிறது. ஆனால் காபி ரைட்ஸ் சட்டப்படி இசையை உருவாக்கியவர்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.நியாயப்படி அவரிடம் ஒரு அனுமதி வாங்கி இருக்க வேண்டும். ஆனால் இளையராஜா எதிர்பார்ப்பது என்னவெனில் தனக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான். அவருடைய இசையில் அமைந்த பாடல்கள் இன்று யாரும் தொட முடியாத வகையில் இருக்கின்றன. அவர் ஒரு மாபெரும் கிரியேட்டர். இசை உலகில் அவரை ஜாம்பவான் என சொல்லுகிறோம்.

ஜாம்பவான் என்றால் அவர் கிரியேட் செய்த அந்த பாடல்களை இன்று வரை இன்னொருவர் தொட முடியுமா என எத்தனை ஆண்டுகளானாலும் அதிசயமாகத்தான் பார்ப்போம். அதை யார் பண்ணப் போகிறார் என யாராலும் சொல்ல முடியாது. அதாவது ஒரே மனிதராக யாராலும் பண்ண முடியாது. அப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இளையராஜா. அப்படி உள்ள மனிதர் கிரியேட் செய்த ஒரு இசையை வேறொரு படத்தில் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு முறையான அனுமதி வாங்கி இருக்க வேண்டும் என்று கூறுகிறார் ஆதவன்.

இந்த அனுமதியை முன்னாடியே வாங்கி இருந்தால் இந்த சர்ச்சை இப்போது வந்திருக்காது. ஆனால் வெளியில் இவர் காசுக்காக தான் இப்படி செய்கிறார் என சொல்கிறார்கள். அதை இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள். காசுக்காக செய்கிறார் என்றால் ஆரம்ப காலகட்டங்களில் எத்தனையோ இயக்குனர்களுக்கு இவர் இலவசமாக இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக புதுமுக இயக்குனர்கள் இவரை தேடி வந்தால் இந்த படம் முதலில் வெற்றியாகட்டும் உன்னுடைய அடுத்த படத்தில் நான் பணம் வாங்கிக் கொள்கிறேன் என்றுதான் கூறியிருக்கிறார்.

ஏன் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கூட சந்தான பாரதியிடம் இருந்து இவர் பணமே வாங்கவில்லை. அதைப்போல முதல் மரியாதை படத்தில் இவர் முதலில் சம்பளம் வாங்கவில்லை. ஆனால் இதே மாதிரி ரகுமான் மற்றும் அனிருத்திடம் புதுமுக இயக்குனர்கள் சென்று உங்கள் இசை இந்த படத்திற்கு இருந்தால் என்னுடைய படம் வெற்றியாகும் என சொல்லி வாய்ப்புகள் கேட்டுப்பாருங்கள் நடக்குமா? நடக்காது .ஏனெனில் அவர்கள் பிரம்மாண்டத்தை நாடிதான் இருக்கிறார்கள். ஆனால் இளையராஜா சார் அப்படி கிடையாது. அவருக்கு உண்டான மரியாதையை கொடுத்தால் இவ்வளவு பிரச்சனைகள் வந்திருக்காது என ஆதவன் கூறியிருக்கிறார்.

Next Story