Ilaiyaraja: தமிழ் சினிமாவில் இசைத்துறையில் ஒரு பெரிய ஆளுமையாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 70களில் ஆரம்பித்த இவருடைய பயணம் நான்கு தலைமுறைகளை கடந்தும் வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கின்றது. எல்லா சூழ்நிலைகளிலும் கேட்கக்கூடிய பாடலாகவே இளையராஜாவின் பாடல்கள் அமைந்தது தான் சிறப்பு.
இவர் இசையில் அமைந்த பாடல்களை கேட்கும்போது ஒரு ஆத்ம திருப்தி அடைந்ததைப் போலவே ஒவ்வொரு ரசிகர்களும் உணர்ந்து இருக்கின்றனர். கவலையில் இருக்கும் போதும் சரி சந்தோஷத்தில் இருக்கும் போதும் சரி மன அழுத்தத்தில் இருக்கும் போதும் சரி உடனே ரசிகர்கள் கேட்கக்கூடிய பாடலாக இன்றுவரை இருப்பது இளையராஜாவின் பாடல்கள் தான்.
இதையும் படிங்க: ஷாக் கொடுத்த ஸ்ருதி… லவ் செய்யும் ரோகினி… முத்துவை முறைக்கும் மீனா.. மூணு பேரும் கலக்குறீங்களே!…
அந்த அளவுக்கு ஒரு பெரும் தாக்கத்தை தமிழக ரசிகர்களிடையே இளையராஜா ஏற்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில் இளையராஜாவை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பிரபல மூத்த சினிமா பத்திரிக்கையாளரான சுபேர் ஒரு பேட்டியில் கூறியது வைரலாகி வருகின்றது.
அதாவது இளையராஜாவின் பயோபிக் படமாக எடுக்கும் பட்சத்தில் அவர் வாழ்க்கையில் நடந்த எல்லா நிகழ்வுகளும் அந்தப் படத்தில் அமைந்தாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். அந்த அளவுக்கு இளையராஜாவின் வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றது. அதில் ஒன்று அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு காதல் அனுபவம்.
இதையும் படிங்க: இளையராஜாவின் ரசிகர் என்பதையும் தாண்டி இப்படி ஒரு ப்ளாஷ்பேக்கா? பயோபிக்கில் தனுஷ் நடிக்க இதுதான் காரணமா
ஏற்கனவே இளையராஜா ஒரு மேடையில் என் வாழ்க்கையில் நான் காதலித்த ஒரே ஒரு பெண் லைலா என்று கூறி இருந்தார். அவர் கூறியது லைலா மஜ்னு கதையில் வரும் அந்த லைலாவைதான். ஆனால் உண்மையிலேயே அவர் வாழ்க்கையில் காதல் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறதாம்.
ஆரம்பத்தில் பல பாடல்களுக்கு இசையமைத்து வந்த இளையராஜாவை ஒரு திரைப்பட பின்னணிப் பாடகி காதலித்துள்ளார். ஆனால் அந்தக் காதலை இளையராஜா ஏற்றுக் கொள்ளவில்லையாம். இந்த மன உளைச்சலில் இருந்த அந்தப் பாடகி இனிமேல் நான் பாடவே மாட்டேன் என்று சினிமாவிற்கு முழுக்கு போட்டு போய்விட்டாராம். அன்றிலிருந்து இன்று வரை அந்த பாடகி பாடவே இல்லையாம். ஆனால் யார் அந்த பாடகி என்பதை சுபேர் கூற மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: 10 ரூபாய் வாங்கி தரேன்னு சொல்லி செந்தில் வாழ்க்கையையே மாற்றிய கவுண்டமணி!.. நடந்தது இதுதான்!…
அதனால் இந்த நிகழ்வும் இளையராஜாவின் பயோபிக்கில் இடம்பெற்றால் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு வரவேற்பைப் பெறும் என சுபேர் கூறினார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…