இளையராஜாவின் மாங்குயிலே.. மாங்குயிலே! அவர பத்தி தெரியாம இவங்க வேற கும்மாளம் போடுறாங்களே

Ilaiyaraja: தமிழ் சினிமாவில் இசையில் பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர். ஆரம்பத்தில் இளையராஜா அவருடைய அண்ணன் பாவலர் வரதராஜன் உடன் இணைந்து பிரச்சார பாடகராக தான் பல நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். ஆரம்ப காலங்களில் இவர் பெண் குரலில் மட்டுமே பாடி வந்தாராம். இவருடைய மேற்கத்திய இசைக்கி குருநாதராக மாஸ்டர் தன்ராஜ் என்பவர் தான் இருந்திருக்கிறார்.

ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்டு, புல்லாங்குழல் என பல்வேறு இசை கருவிகளை வாசிப்பதில் கை தேர்ந்தவர் இளையராஜா. திரைத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தவர் தன் சகோதரர்கள் மூவருடன் இணைந்து பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இசைக் குழுவையும் நடத்தி வந்திருக்கிறார்.

இதையும் படிங்க: சம்பளமே வாங்காம இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன்!.. அந்த இயக்குனர் ரொம்ப ஸ்பெஷல்!..

இவருடைய முதல் படமான அன்னக்கிளி படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் தான் இளையராஜாவை முதன் முதலில் அறிமுகம் செய்தார். சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது. ஆனால் சினிமாவில் சேர்வதற்கு முன் இவர் டேனியல் ராசையா என்று அழைக்கப்பட்டார். கவிஞர் கண்ணதாசனால் இசையமைக்க தொடங்கிய இளையராஜா அவரின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார்.

இன்று இசையில் ஒரு பெரும் புரட்சியை செய்த பெருமை இளையராஜாவை சேரும். இந்த நிலையில் சமீப காலமாக இவருடைய பாடல் குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாக்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. காப்பிரைட்ஸ் என்ற ஒரு விஷயம் தான். அது தன் அனுமதியில்லாமல் தன் பாடலை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: டிராமா போட்டு அழுக விடும் ஈஸ்வரி… கதிகலங்கி நிற்கும் ராதிகா… நிம்மதியா இருக்கும் பாக்கியா..

இளையராஜா கூலி படத்தில் அவருடைய பாடலை பயன்படுத்தியது, அதன் பிறகு மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் அவருடைய பாடலை பயன்படுத்தியது என அடுத்தடுத்த நோட்டீசுகளை விட்டிருக்கும் நிலையில் இப்போது திடீரென ஒரு வீடியோ வைரலாக வருகின்றது. ஒரு கோயில் திருவிழாக்களில் பம்பை வர்ஷனில் இளையராஜாவின் மாங்குயிலே மாங்குயிலே பாடலை இசை அமைத்து அனைவரும் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அய்யய்யோ இளையராஜாவை பற்றி தெரியாமல் இவங்க வேற இப்படி பாடிக் கொண்டிருக்கிறார்களே? இவங்க நிலைமை அடுத்து என்னவாகும் கண்டிப்பாக இவங்களுக்கு நோட்டீஸ் உறுதி என கிண்டலாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஒருநாள் இது நடக்கும்!.. ஏ.வி.எம் சரவணனிடம் சவால் விட்ட நாகேஷ்!.. அட அது அப்படியே நடந்துச்சே!….

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C7TJb_2Jf1-/?igsh=ZGFyb2IwenJ1aXRy

 

Related Articles

Next Story