மூடு சரியில்லாம இருந்த இளையராஜா... இயக்குனர் சொன்ன வார்த்தை... கிடைத்ததோ சூப்பர்ஹிட் ரஜினி பாடல்!

ilaiyaraja
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் எஜமான் படத்தின் கம்போசிங்கிற்காக இளையராஜாவிடம் சென்றுள்ளார். 'இன்னைக்கு வேண்டாம்யா. நாளைக்கு பார்ப்போம்'னு சொல்லி இருக்கிறார் இளையராஜா.
அவர் அப்போது மூடு சரியில்லாமல் இருந்தார். ஏன்னா அவர் வருவதற்கு முன் வந்த இயக்குனர்களுக்கு அவர் போட்ட சில பாடல்கள் பிடிக்கவில்லை. அதனால் இளையராஜா கொஞ்சம் அப்செட்டாக இருந்துள்ளார். அந்த நேரம் பார்த்து ஆர்.வி.உதயகுமார் சென்றதால் தான் அப்படி சொல்லி இருக்கிறார்.

RVUthayakumar
உடனே நடந்ததை தெரிந்து கொண்ட உதயகுமார் இளையராஜாவின் உதவியாளர் சுந்தரராஜனிடம் 'அவங்க என்னென்ன ட்யூன்கள் எல்லாம் வேணாம்னு சொன்னாங்க'ன்னு கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்னவற்றில் இருந்து பொறுமையாக 2 பாடல்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அது தான் 'ஒரு நாளும் உனை மறவாத', 'நிலவே முகம் காட்டு' ஆகிய பாடல்கள்.
Also read: Vijay: தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு தடபுடல் விருந்து… அசத்தும் விஜய்!
கொஞ்ச நேரம் கழித்து இளையராஜாவிடம் சென்றுள்ளார். 'நீ இன்னும் போகலையா'ன்னு இளையராஜா கேட்டுள்ளார். அப்போது 'இல்ல சார் நாளைக்கு ரெக்கார்டிங்' என்று உதயகுமார் சொல்ல, 'அதெல்லாம் முடியாது' என்று இளையராஜா சொல்கிறார்.
'இல்ல சார். டியூன் நல்லாருக்கு' என்று அவர் சொன்னதும் 'எந்த டியூன்' என்று கேட்ட இளையராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி. 'அவங்க வேணாம்னு சொன்னதுதான். அதிலிருந்து 2 ட்யூன் எடுத்துருக்கேன்'னு உதயகுமார் விவரம் சொல்கிறார்.

ejaman
'உனக்குப் பிடிச்சிருக்கா'ன்னு ஆவலோடு கேட்ட இளையராஜாவுக்கு அப்போது தான் தெம்பு வந்துள்ளது. 'ஆமா சார்'னு சொன்ன உதயகுமாருக்கோ அந்த முத்தான 2 பாடல்களும் கிடைத்துவிட்டது. அந்தப் பாடலில் வரும் வரிகள் அவ்வளவு இனிமையானவை.
Also read: ஐஸ்வர்யா தனுஷால் என்னை பழி வாங்கிய பிருந்தா மாஸ்டர்… ஆர்ஜே பாலாஜி கொடுத்த ஷாக்
'ஒரு நாளும் உனைமறவாத இனிதான வரம் வேண்டும். உணர்வாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்' என்று வரும். அந்த வரிகளின் படியே நானும் அவரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஒரு பேட்டியில் ஆர்.வி.உதயகுமாரே இளையராஜாவைப் பற்றிப் பேசியுள்ளார்.