ilaiyaraja
அன்னக்கிளியில் தொடங்கி இன்று வரை இளையராஜாவின் பாடல்கள் வெற்றிக் கொடி நாட்டி வருகின்றன. இன்றுவரை 2கே கிட்ஸ்களும் கூட இளையராஜாவின் இசையை ரொம்பவே ரசிக்கின்றனர். இளையராஜாவின் பாடல்களுக்காகவே வெற்றி பெற்ற படங்கள் நிறைய உள்ளன. படமே வெற்றி பெறாமல் தோல்வி அடைந்து இருந்தாலும் அவரது பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. இந்த ரகத்திலும் நிறைய படங்களைச் சொல்லலாம்.
அந்த வகையில் ஒரு தயாரிப்பாளரின் படம் ஒன்றுக்கு மிகப்பெரிய நஷ்டம். அந்த நஷ்டத்தை எல்லாம் ஈடுகட்டும் வகையில் ஒரு கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுத் தந்த பாடலைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். அதுவும் குறிப்பாக ஒரே ஒரு பாடல். அது என்னன்னு பார்க்கலாம்.
avatharam
1995ல் வெளியான படம் அவதாரம். இந்தப் படத்தில் ரேவதி, நாசர், வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லிகணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் முதல் முறையாக நாசர் இயக்கி நடித்துள்ளார். அதனால்தானோ என்னவோ அவதாரம் என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்தில் இளையராஜா இசை அமைத்துள்ளார்.
பாடல்களை வாலி எழுதியுள்ளார். இளையராஜா கோலோச்சிய காலகட்டம் அது. அதனாலயே விநியோகஸ்தர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அந்தப் படத்தை வாங்குவார்கள். முதன்முதலாக ஒரு இசை அமைப்பாளரோட போட்டோவை போஸ்டரில் கொண்டு வந்தது இளையராஜாவாகத்தான் இருக்கும்.
காலத்தால் அழியாத பல பாடல்களை உருவாக்கியவர் இளையராஜா. அவதாரம் படத்திலும் பாடல்கள் எல்லாமே சூப்பர்தான். ஆனால் படம் மிகப்பெரிய தோல்வி. இந்தப் படத்தை வைத்தியநாதன் தயாரித்தார். இந்தப் படத்துக்காக ஒரு குறிப்பிட்ட பாடலை இளையராஜா நாசர் மட்டும் தயாரிப்பாளருக்குப் போட்டுக் காட்டினாராம்.
ஆனால் நாசரோ அந்தப் பாடலை வேணாம்னு சொல்லி இருக்கிறார். ஆனால் வற்புறுத்திச் சொன்னதால வேண்டா வெறுப்பாக அந்தப் பாடலைச் சேர்க்கிறார்கள். அந்தப் பாடல்தான் தயாரிப்பாளருக்கு ஒரு கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுத் தந்ததாம். தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ என்ற பாடல்தான் அது.
இந்தப் படத்தில் அமைந்த பாடல்களை எல்லாம் இளையராஜாவே சொந்தக்குரலில் பாடி இருந்தார். அவருடைய குரல் நாசருக்கு மிகச்சரியாகப் பொருந்தியது. அன்றைய காலகட்டத்தில் 46 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் அடைந்தது. ஆனாலும் தயாரிப்பாளர் சந்தோஷமாகத்தான் இருந்தது. அதற்கு ஒரே ஒரு காரணம் தென்றல் வந்து தீண்டும்போது என்ற பாடல்தான். அந்த ஒரே பாடலுக்காக அப்போது கேசட் விற்பனை எகிறியுள்ளது. ஏறக்குறைய 20 லட்சம் கேசட்டுகள் விற்பனையாகி 1.6கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுத் தந்ததாம்.
மூக்குத்தி அம்மன்…
Actor Manjoj:…
Veera dheera…
OTT Watch:…
நேற்று ஒரு…