ஆர்மோனியத்தை தொடாமல் வித்தியாசமாக இசை அமைத்த இளையராஜா... என்ன படம்னு தெரியுமா?

by sankaran v |   ( Updated:2024-03-14 08:50:37  )
Ilaiyaraja
X

Ilaiyaraja

விஜய், சூர்யாவின் இளமைத் துள்ளலான நடிப்பில் வெளியான படம் ப்ரண்ட்ஸ். மலையாள இயக்குனர் சித்திக் ரொம்பவே அருமையாக இயக்கிய படம். ப்ரண்ட்ஸ் படத்தில் வரும் நேசமணி வடிவேலுவின் கேரக்டரை மறக்கவே முடியாது. அவ்வளவு சூப்பர் டூப்பரான காமெடி இது.

இந்தப் படத்தில் வரும் ருக்கு ருக்கு ரூப்பிகா பாடலில் டிரம்பட்டில் இளையராஜா வெஸ்டர்ன் மியூசிக்கில் கலக்கியிருப்பார். இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா, விஜய் யேசுதாஸ், சௌமியா ஆகியோர் பாடியிருப்பார்கள்.

Friends movie

Friends movie

தமிழில் வரும் நேசிப்பதும், சுவாசிப்பதும் உன் பாடல்தான் என தமிழ்வரிகள் வரும். சீசன் நாங்கள்ல்லவோ இயற்கையில், என்றும் ஒரு சீசன் தான் இளமையில்... என்று அழகாக வரிகளைப் போட்டு இருப்பார்.

இளமைக்கு எப்போதும் ஒரே சீசன் தான். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். தினமும் இங்கே பேஷன் ஷோசும் இளமை இனிமை துடிக்குதே.... நெஞ்சில் ஏதோ பிளாசம் சம்சம் புத்தம் புதிதாய் ஜொலிக்குதே... இதுக்குள்ளும் பிளாசம் என்ற ஆங்கில சொல் தான் என்றாலும் அது அழகு தான். முடிக்கும்போது ஒருபக்கம் மின்னல் வெட்ட ஒரு பக்கம் மேளம் கொட்ட கொண்டாட்டம் கொண்டாட்டம் என்று அழகாக முடித்திருப்பார்.

2வது சரணத்தில் கரையும் வண்ணங்கள் போல் வயதுகள் உருகும் ஐஸ்கிரீமைப் போல நினைவுகள் என்று அழகாக சொல்லியிருப்பார். அடுத்ததாக சிடி போல சுழலும் நெஞ்சம் டிஜிட்டல் இசையில் மிதக்குதே... புத்தம் புதிதாய் கண்கள் இரண்டும் 3டி உலகில் ஜொலிக்குதே என்று அழகாகப் பாடியிருப்பார்.

இந்தப் பாடலில் இசைஞானி இளையராஜா ஆர்மோனியத்தைத் தொடாமல் இசை அமைத்துள்ளார். இந்தப் பாடலில் மெலடியாக ஒரு மெட்டுப் போட்டு ரெடியாக வைத்துள்ளார். அது இயக்குனர் சித்திக்குக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இது பாசிலுக்குப் போடுற மாதிரி போட்டுருக்கேன்.

ஏன் பிடிக்கலன்னு கேட்க, இன்னும் கொஞ்சம் ஜாலியாகப் போடுங்கன்னு சொல்கிறார் சித்திக். உடனே கவிஞர் பழனிபாரதியை எங்கும் போகவிடாமல் நீங்க எந்த பாஷைலனாலும் பாட்டை எழுதுங்க. இங்கேயே இருந்து எழுதுங்கன்னு இளமைத் துள்ளலுடன் மெட்டைப் போட்டுக்கொடுத்தாராம் இளையராஜா.

மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Next Story