சிவாஜிக்கு அரசே செய்யாத மரியாதையை செய்த இளையராஜா!.. மறைக்கப்பட்ட ஷாக்கிங்கான சம்பவம்!..
தமிழ் சினிமாவில் அவரவர் அவரவர் துறையில் முத்திரையை பதித்து விட்டு செல்கின்றனர். அந்த வகையில் நடிப்பு என்றாலே முதலில் நியாபகத்திற்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பு வெறியன், நடிப்பு அரக்கன் என்று நடிப்பிற்கு பல அடைமொழிகளை கொடுத்து சிவாஜியை வர்ணித்துக் கொண்டே போகலாம்.
அத்தனை நவரசங்களையும் தன்னுள் அடக்கி ஆளக் கூடியவராக வலம் வந்தார் நம் நடிகர் திலகம். முதல் படிக்கட்டே வெற்றிப் படிகட்டாக மாறியது சிவாஜிக்கு. பராசக்தியில் அவர் பேசிய வசனங்கள் இன்று வரை இணையத்தில் பல்வேறு குரல்களில் ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இதையும் படிங்க : அஜித்துக்கு சொன்ன கதையில் விஜய்!. பல வருட கோபம்!.. சேர வாய்ப்பே இல்லையாம்…
தமிழுக்கு என்று பிறந்தவர் என்றே சொல்லலாம். உச்சரிப்பில் அவ்வளவு தெளிவு, அவ்வளவு ஆழம் அவர் நடிக்கும் படங்களின் வாயிலாகவே அறிந்து கொள்ள முடியும். கிட்டத்தட்ட மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த ஒரு உன்னதமான கலைஞராக வாழ்ந்தார் சிவாஜி கணேசன்.
இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் வரை இருக்கின்ற நடிகர்களுக்குள்ளும் சிவாஜியின் பிரதிபலிப்பு இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு போயிருக்கிறார் நம் திலகம். இத்தனை சிறப்புமிக்க அந்த கலைஞனுக்கு அரசு இதுவரை அந்த ஒரு சரியான மரியாதையையும் கொடுக்கவில்லை.
சிறப்புமிக்க விருதுகளையும் கொடுக்கவில்லை என சமீபத்தில் ஒரு விழா மேடையில் கண்கலங்கி பேசினார் இசைஞானி இளையராஜா. சிவாஜியை பற்றி பல காலம் ஆராய்ந்து அவரை பற்றி ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார் மருது மோகன். அதற்கான விழாவை இரண்டு தினங்களுக்கு முன் தான் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதையும் படிங்க : அவமானப்படுத்திய நடிகர் கார்த்திக்.. பெருந்தன்மையால் நிமிர்ந்து நின்ன ஆனந்தராஜ்.. இது செம மேட்டரு!..
அந்த விழாவிற்கு சிவாஜி குடும்பத்தினர், பாரதிராஜா, இளையராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய இளையராஜா தான் இவற்றையேல்லாம் கூறினார். மேலும் அவர் கூறும்போது பிரபல இயக்குனர் எஸ்.பி,முத்துராமன் கலையுலகம் சார்பில் சிவாஜிக்கு ஒரு வெள்ளியால் ஆன சிவாஜி குதிரையில் ஏறி உட்கார்ந்திருக்கும் விதமான சிலையை பரிசாக கொடுக்கலாம் என கருதி சினிமா பிரபலங்களிடம் நிதி திரட்டிக் கொண்டிருந்தாராம்.
அப்போது கமல், ரஜினியிடம் நிதி வசூல் செய்து இளையராஜாவிடம் போய் கேட்டிருக்கிறார். இளையராஜா எல்லாவற்றையும் கேட்டுவிட்டு இந்த சிலையில் எவன் பேரும் இருக்கக் கூடாது என கருதி அதற்கான மொத்த பணத்தையும் இளையராஜாவே கொடுத்துவிட்டாராம். இந்த சிலையை பெற்றுக் கொண்ட சிவாஜி அவரது மனைவியிடம் யாரை மறந்தாலும் கடைசி வரை இளையராஜாவை மட்டும் மறக்கக் கூடாது என்று கூறினாராம்.
இதை கூறிய இளையராஜா ‘ஏதோ நான் தான் எல்லா பணத்தையும் கொடுத்தேன் என்று நான் தம்பட்டம் அடிக்கவில்லை, எந்த அரசும் கலையுலகமும் செய்யாத மரியாதையை நான் தனி ஒருவனாக செய்து காட்டியிருக்கிறேன், இதுவரை யாருக்கும் தெரியாத விஷயம் இது ’ என்று மேடையில் கண்கலங்கி கூறினார்.