போற இடமெல்லாம் வம்பு! இளையராஜா பகைத்துக் கொண்ட அந்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
80களின் காலகட்டத்தில் தன் இசை இல்லாமல் எந்த படங்களும் வெளிவருவதில்லை என்ற ஒரு பெரிய ஆளுமையாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. அப்போதிலிருந்து தற்போது வரை பல பாடல்களை ரசிகர்களுக்காக கொடுத்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார் இளையராஜா. அவர் இசைக்காக அவர் வீட்டின் வாசலில் காத்திருந்த இயக்குனர்கள் ஏராளம். அதே அளவிற்கு சமீப காலமாக இளையராஜாவை பற்றி வேண்டாத பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பொதுவாகவே இளையராஜா கறார் பேர்வழி என அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். முகத்திற்கு எதிராக சட்டென பேசக்கூடியவரும் கூட. இந்த நிலையில் இளையராஜா யார் யாருடன் பிரச்சனையில் இருந்தார் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.
பாலச்சந்தர்-இளையராஜா: பாலச்சந்தர் இளையராஜா இவர்கள் கூட்டணியில் வெளிவந்த அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றியடைந்த படங்களாகவே அமைந்தன. சிந்து பைரவியில் ஆரம்பித்த இவர்கள் கூட்டணி மனதில் உறுதி வேண்டும் ,உன்னால் முடியும் தம்பி புன்னகை மன்னன், புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களிலும் தொடர்ந்தன .கிட்டத்தட்ட இருவரும் சேர்ந்து பணியாற்றிய படங்கள் 6 .அதே சமயம் பாலச்சந்தர் தயாரிப்பில் மொத்தம் 14 படங்களுக்கு இளையராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவிடம் பாலச்சந்தர் கேட்டிருந்தாராம் .ஆனால் அந்த நேரத்தில் இளையராஜா மிகவும் பிசியாக இருந்ததனால் என்னால் இப்போது முடியாது, என் படங்களை எல்லாம் முடித்துக் கொண்டு பிறகு தருகிறேன் என்று சொன்னாராம் .இதனால் கோபம் கொண்ட பாலச்சந்தர் வேறொரு இசையமைப்பாளரை வைத்து அந்த படத்திற்கான பின்னணி இசையை முடித்து படத்தை வெளியிட்டாராம் .இதுதான் இளையராஜாவிருக்கும் பாலச்சந்தருக்கும் ஏற்பட்ட முதல் மோதல்.
இளையராஜா-எஸ். பி. பாலசுப்ரமணியம்: இவர்கள் கூட்டணியை பற்றி சொல்லவே வேண்டாம். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களை மிகவும் ஈர்த்து வருகிறது. எண்ணற்ற பாடல்களை வழங்கிய இளையராஜா எஸ் பி பி ஆகிய இருவருக்கும் அப்படி என்னதான் பிரச்சனை என்று பார்த்தால் இளையராஜா எஸ்பிபிக்கு எதிராக ஒரு சட்டபூர்வமான நோட்டீசை அனுப்பி இருந்தார். அந்த நோட்டீசில் இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி இன்றி இசையமைத்தாலோ பாடினாலோ காப்புரிமை மீறல் என்ற வழக்கின் கீழ் அவர் ஒரு பெரும் தொகையை செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீசில் பாலசுப்பிரமணியனுக்கு எதிராக இளையராஜா கொடுத்திருந்தார்.
வைரமுத்து- இளையராஜா: கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக வைரமுத்துவும் இளையராஜாவும் ஒரு அசைக்க முடியாத கூட்டணியாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார்கள். இவருடைய இசையும் வைரமுத்துவின் மொழியும் ஒன்றாக இணைந்து சினிமாவை ஒரு ஆகச் சிறந்த படைப்பாக கொண்டு சென்றது. இப்படி சுமூகமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் நட்பில் இளையராஜாவின் சில செய்கைகள் தான் வைரமுத்துவை கடுப்பேத்தி இருக்கிறது. அதாவது வைரமுத்து பாடல் வரிகளை கொடுத்தாலும் அதில் இளையராஜா தலையிட்டு மாற்றம் சொல்வாராம். அதுதான் அவர்களுக்குள்ள விரிசலை அதிகப்படுத்தி இருக்கிறது. உதாரணமாக இசைப்பாடும் தென்றல் என்ற படத்திற்காக ஒரு பாடல் வரியை வைரமுத்து எழுதி கொடுக்க இளையராஜா அது பிடிக்கவில்லை என்று அவரே எழுதி காட்டினாராம். இதனால் வைரமுத்து மிகவும் கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இப்படி சிறு சிறு பிரச்சனைகள் அவர்களுக்குள் எழவே கடைசிவரை இருவரும் பேசிக் கொள்ளவே இல்லையாம்.