Connect with us

Cinema History

கண்ணை மூடி கேட்டால் வானத்தில் பறப்பீர்கள்!.. ஆகாயத்தில் பறக்கவைத்த இசைஞானியின் 4 பாடல்கள்…

இசை ஒரு மனிதனை வாழ்வியலோடு கட்டிப்போடுகிறது. நம்மைச் சுற்றிலும் தினமும் ஆயிரக்கணக்கான இசையைக் கேட்டு வருகிறோம். இசை இல்லாத இடமே இல்லை. சாதாரண இசைக்கே இவ்வளவு பீடிகை என்றால் இசைஞானியின் இசை என்றால் சும்மாவா? நம்மை பாடல்களில் பறக்க வைத்திருப்பார். எந்தெந்தப் பாடல்கள் என பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

சிவப்பு ரோஜாக்கள் படத்தில் வாலி எழுதிய பாடல் நினைவோ ஒரு பறவை. இந்தப் பாடலைக் கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் வானத்தில் இரு காதலர்கள் இறக்கையுடன் பறந்தால் எப்படி இருக்கும்? அது போன்ற உணர்வை ஏற்படுத்தும். காதல் போதையில் இருவர் வானத்தில் பறந்தது போன்ற உணர்வை இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார்.

குரு படத்தில் ஸ்ரீதேவியும், கமலும் கிளைடர் விமானத்தில் மாறி மாறி பறந்து செல்வர். பாடலின் இடையே இரு கிளைடரும் சந்தித்துக் கொள்ளும்போது அருமையான இசையை உருவாக்கியிருப்பார்.

guru

கே.பாக்யராஜின் சின்ன வீடு படத்தில் ஒரு பாட்டு. பாக்யராஜ் கல்பனாவைக் கல்யாணம் பண்ணிருப்பார். இவருக்கு அழகான பெண் கிடைப்பாள் என்று எதிர்பார்த்த நிலையில் குண்டான மனைவி கிடைக்க அதிருப்தியில் இருக்கிறார்.

அப்போது இவருடன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது. அது கள்ளக்காதலர்கள் சந்தித்துக் கொள்வது போன்ற உணர்வை உண்டாக்கும். இவர்கள் வானத்தில் சஞ்சரித்தால் எப்படி இருக்கும் என்ற ஃபீலிங்கை இளையராஜா கொண்டு வந்து இருந்தார்.

இது எப்படின்னா கள்ளக்காதலர்கள் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து செல்வார்கள். சிட்டுக்குருவி வெட்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத்தருது… பாடல்.

பட்டாம்பூச்சி ஒரு தும்பைச்செடியில் உட்கார்ந்து சலசலன்னு அடுத்த செடிக்குப் பறக்கும். இப்படி ஒரு ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்தால் எப்படி இருக்கும் என்பதை ஒரு பாடலில் கொண்டு வந்திருப்பார் இளையராஜா.

அது காதலுக்கு மரியாதை. ஃபாசில் படம். அந்தப் பாடல் ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே பாடல். அருமையான பின்னணி இசையுடன் நம்மை பட்டாம்பூச்சியுடன் இணைந்து பறக்கச் செய்திருக்கும். இவ்வாறு ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top