சமீபத்தில் ஆஸ்கர் விருது பட்டியலில் வென்ற படத்தை விட அதனுடன் கடும் போட்டியிட்ட ஒரு ஈரானிய திரைப்படத்திற்கு தான் மக்கள் மத்தியில் மவுசு அதிகமாக இருக்கிறது. அந்த திரைப்படம் தான் சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன். இந்த திரைப்படம் தனது சகோதரிக்காக ஒரு சிறுவன் ஷூ வாங்க என்னவெல்லாம் செய்கிறான் என்பதே கதை.
இந்த திரைப்படம் சின்ன குழந்தைகள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்களுடைய உலகம் என படம் எந்த சமரசமுமில்லாமல் அவ்வளவு அற்புதமாக இருக்கும். இந்த படத்தை அதிகாரபூர்வமாக தமிழில் அக்கா குருவி எனும் பெயரில் இயக்குனர் சாமி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான வீடியோவில் பேசிய இளையராஜா, ‘ நான் நேரம் கிடைக்கும் போது இந்த மாதிரியான சர்வதேச படங்களை பார்ப்பேன். அப்படி நான் பார்த்து வியந்த படம் இது. இந்த மாதிரியான சிந்தனை ஏன் நம்ம ஊர் இயக்குனர்களுக்கு வருவதில்லை என தெரியவில்லை. ஒரு கலைஞனுக்கு இந்த மாதிரியான சிந்தனை வர வேண்டும். அது அவனை தாக்க வேண்டும். பிறகு தான் இப்படியான சினிமாவை எழுத முடியும். அது நம்ம ஊர் இயக்குனர்களுக்கு இல்லை. இயக்குனர் சாமி அதனை நல்ல முறையில் அதன் உண்மை தன்மை மாறாமல் படமாக்கியுள்ளார்.
இதையும் படியுங்களேன் – எங்க செல்லம் கீர்த்தி சுரேஷை என்னயா பண்ணி வச்சிருக்கீங்க.?! பதைபதைக்க வைத்த ‘அந்த’ வீடியோ..,
இப்படி தமிழ் இயக்குனர்களை போட்டு தாக்கி பேசிவிட்டு, இறுதியில், ‘ இப்படி சாமி போல புது முக இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைக்க காரணமும் இதுதான். அதனால் தான் மணிரத்னம் முதல் படத்திற்க்கு கூட நான் இசையமைத்தேன்.’ என கடைசியாக பேசி முடித்தார்.
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…