Connect with us

தனது இசையில் சுசீலாவைப் பாட வைக்க முடியாது என்று இளையராஜா அடம்பிடிக்க இதுதான் காரணமா?

Cinema History

தனது இசையில் சுசீலாவைப் பாட வைக்க முடியாது என்று இளையராஜா அடம்பிடிக்க இதுதான் காரணமா?

சைமா விருது வழங்கும் விழாவில் பி.சுசீலா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.

இவர் 40 ஆயிரம் பாடல்கள் பாடி திரையுலகில் சாதனை படைத்துள்ளார். இவருக்கு சித்ரா, ராதிகா ஆகியோர் இந்த விருதை வழங்கினர். 66 வருடங்கள் பாடிக்கொண்டு இருக்கிறார்கள். இவருடைய சுவாரஸ்யமான நினைவுகளை பகிர்கிறார்.

தெலுங்குல இருந்து தமிழுக்கு வந்துள்ளேன். 1951ல பாட ஆரம்பிச்சேன். அதிலிருந்து 2012 வரை பாடிக்கிட்டு இருந்தேன். ராதிகா, குஷ்பூ ஹீரோயின்ஸ்களுக்குள்ளேத் தான் நான் இருக்கிறேன். ஆகியோரை வைத்துத் தான் நான் இருக்கேன் என்று சிலாகித்து சொன்னார்.

p.susheela

இசைஞானி இளையராஜாவும் பி.சுசீலாவுக்கும் இடையே மோதல் நடந்த விஷயம் பலருக்கும் தெரியாது. அதாவது இளையராஜா பி.சுசீலாவை பாட வைக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார். அதன் காரணம் என்ன? இளையராஜா அப்படி என்ன தான் சொன்னா?

அன்னக்கிளி 1976ல் வெளியானது. இது வெள்ளிவிழா கண்ட படம். தேவராஜ்-மோகன் ஆகியோர் இயக்கினர். இது கோடை காலத்தில் வந்த படம். இந்தப்படத்தில் இளையராஜாவின் இன்னிசை மழை சுட்டெரிக்கும் கோடைக்குக் குளுமையைத் தந்தன. மச்சானைப் பார்த்தீங்களா, அன்னக்கிளியே உன்னைத் தேடுதே, மச்சானைப் பார்த்தீங்களா, சுட்ட சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும், சொந்தமில்லை, பந்தமில்லை, அட ராக்காயி, மூக்காயி என அனைத்துப்பாடல்களும் படத்திற்கு வலு சேர்த்தன.

ilaiyaraja, janaki

பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின்னர் தான் இந்தப்படத்தில் இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தனது இசையை பட்டி தொட்டி எங்கும் பரவ வைத்து பட்டையைக் கிளப்பி விட்டார். இந்தப்படத்திற்கு பி.சுசீலாவை வைத்துத்தான் எல்லா பாடல்களையும் பாட வைக்கவேண்டும் என்று பஞ்சு அருணாசலம் எண்ணியிருந்த நிலையில் இளையராஜா அதற்கு பிடிவாதமாக மறுத்து விட்டார்.

அப்போது இந்திப்பாடல்களின் மேல் மோகம் கொண்டு இருந்தனர் தமிழ் ரசிகர்கள். அதனால் புது இசை அமைப்பாளரைத் தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று பஞ்சு அருணாசலமும் முடிவு செய்தார்.

படத்தில் சுசீலா அவர்களைப் பாடவைக்க எனக்கு விருப்பமில்லை. எஸ்.ஜானகி அவர்களே பாடட்டும். அவர் பாடினால் தான் நன்றாக இருக்கும். படத்தில் தனக்கு வாய்ப்பளித்த பஞ்சுவிற்காக ஒரே ஒரு பாடலை பி.சுசீலாவிற்குக் கொடுத்தார். சொந்தமில்லை பந்தமில்லை என்ற பாடல் தான் அது.

ilaiyaraja

பிடிவாதமாக இளையராஜா மறுக்க என்ன காரணம் என்றால் ஆரம்பகால கட்டத்தில் நடந்த மறக்க முடியாத விஷயம்தான். இளையராஜா பி.குமாரின் இசைக்குழுவில் கிடார் வாசித்துக் கொண்டிருந்தார். இதே இசைக்குழுவில் தான் பி.சுசீலாவும் பாடிக்கொண்டு இருந்தார். ஒருநாள் சுசீலாவிற்கு பாட வேண்டிய நோட்சை இளையராஜா தான் எழுதிக்கொடுத்தாராம்.

அப்போது பாடிப்பார்த்த சுசீலா அந்த நோட்ஸ் பாடலுக்குப் பொருந்தவில்லை என்று இளையராஜாவிடம் கூறினாராம். அதைக்கேட்ட இளையராஜாவிற்கு வெடுக்கென்று கோபம் வந்து விட்டது. நீங்க என்னத்த நினைச்சிக்கிட்டு பாடுனீங்களோ…என கூறிவிட்டாராம். இளையராஜாவிற்கு தனது இசைப்பணியைப் பற்றி யார் குற்றம் சொன்னாலும் அவரால் தாங்கிக் கொள்ள முடியாதாம்.

இதைக் கேட்ட சுசீலா ‘ஓ’ வென அலறி விட்டாராம். ரெக்கார்டிங் ஏரியாவே பரபரப்பாகி விட்டதாம். அடுத்த நிமிடமே இளையராஜாவை வெளியே அனுப்பி விட அவருக்கு என்று இருந்த வேலையும் பறிபோய்விட்டதாம். இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் அறிமுகம் கிடைத்து அவரது குழுவில் பணியாற்றி வந்த வேளையில் தான் அன்னக்கிளி வாய்ப்பு கிடைத்தது.

தான் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவரால் தான் தனக்கான வாய்ப்பு பறிபோனது என்ற காரணம் கூட தனது இசையில் சுசிலாவை அதிகமாக பாடவைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் ஜானகியையே பெரும்பாலும் தனது இசையில் பாட வைத்திருப்பார் இளையராஜா.

இருந்தாலும் காலம் ஒரு நாள் மாறும் என்பதற்கேற்ப சுசீலாவையும் அவ்வப்போது தனது இசையில் பாட வைத்தார் இளையராஜா. பத்ரகாளி படத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, 16 வயதினிலே படத்தில் செவ்வந்தி பூ முடிச்ச சின்னாத்தா, சிட்டுக்குருவி படத்தில் என் கண்மணி உன் காதலி, பிரியா படத்தில் டார்லிங் டார்லிங் டார்லிங், வைதேகி காத்திருந்தாள் படத்தில் ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு, உயர்ந்த உள்ளம் படத்தில் காலைத்தென்றல் பாடி வரும், ராசாவே உன்னை நம்பி படத்தில் ராசாத்தி மனசுல, கேளடி கண்மணி படத்தில் கற்பூர பொம்மை ஒன்று, சின்னக்கவுண்டர் படத்தில் முத்துமணி மாலை ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.

ilaiyaraja, susheela

இளையராஜாவின் வெற்றிப்படிக்கட்டுகளில் சுசீலாவின் பங்கு முக்கியமானது. இளையராஜா எத்தனையோ பாடல்களை தனது சொந்தக்குரலில் பாடினாலும் முதன்முதலாக டூயட் பாடியது சுசீலாவுடன் தான். அது லட்சுமி படத்தில் வரும் தென்னமரத்துல தென்றல் அடிக்குது நந்தவனக்குயிலே அடியே உன்னை நெனைக்கையிலே என்ற பாடல் தான் அது.

இளையராஜா முதன்முதலாக வாத்தியக்கலைஞராகப் பணியாற்றிய காலத்தில் கன்னடப்பாடல்களைப் பாடியவர் சுசீலா தான். சுசீலா 65 விழாவில் கலந்து கொண்டு இளையராஜா அவரைப் பாராட்டி அவருக்கு வைரமோதிரத்தைப் பரிசாக வழங்கினார்.

 

 

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top