என்னடா இது இளையராஜாவுக்கு வந்த சோதனை?.. சத்தமே இல்லாம ஸ்கோர் செய்த ஏஆர்.ரகுமான்..

by Rohini |
rah_main_cine
X

rahman

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர் இசைஞானி இளையராஜா. தமிழில் வெற்றி நடை போட்ட ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இளையராஜா கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

கலை தேர்ந்தவர்

நாட்டுபுற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் திறமையும் புலமையும் வாய்க்கப்பெற்றவர் இளையராஜா. இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷன் விருதை பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தன் திறமையை நிரூபித்தவர் இளையராஜா.

rah1_cine

rahman

இவர் இசையமைத்த பாடல்களுக்காக நான்கு முறை தேசிய விருதை தட்டிச் சென்றவர் இவர். 70களில் தன் பயணத்தை ஆரம்பித்தாலும் 80களில் இவரின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்தது. இவரின் இசையில் முத்து முத்தான பாடல்களை நாம் காதோரமாக கேட்டிருக்கிறோம்.

காலத்தால் நிலைத்து நிற்கும்

இன்று வரை ஒரு மழை நேரம், குளிர் நேரம், இரவு நேரம் என நேரத்திற்கு ஏற்றாற் போல சூழ்நிலைகளுக்கு ஏற்றாற் போல இவர் பாடல்கள் இல்லாமல் இருக்காது. இசையமைத்த அத்தனை பாடல்களும் காலத்தால் என்றும் அழியாதவை. இன்று வரை இவரின் இசையில் பல கலை நிகழ்ச்சிகள் பல ஊர்களில் அரங்கேறி வருகின்றது.

துபாயில் கச்சேரி

இந்த நிலையில் இவரின் இசைக் கச்சேரி ஒன்று வரும் 25 ஆம் தேதி துபாயில் நடக்க இருந்ததாம். தயாரிப்பாளர் ரமேஷ் பிள்ளை ஏற்பாட்டின் படி சில வருடங்களுக்கு முன்பே இளையராஜாவிடம் லம்பா தொகையை கொடுத்து புக் பண்ணியிருக்கின்றனர். ஆனால் நடந்த விஷயமோ வேற.

rah2_cine

rahman

அந்த கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட் எதுமே விற்கவில்லையாம். இதுவரை இது போன்ற ஒரு நிகழ்வு வெளிநாட்டிலும் இளையராஜாவில் கெரியரிலும் நடந்தது இல்லையாம். டிக்கெட் விற்காமல் நிகழ்ச்சியை நடத்தினால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என கருதி அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விட்டனராம்.

ஏஆர்.ரகுமானை தேடி வந்த கூட்டம்

ஆனால் இளையராஜா கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதே ஸ்டேடியத்தில் போன வாரம் 19 ஆம் தேதி ஏஆர். ரகுமான் ஒரு கச்சேரி நடத்தினராம். முற்றிலும் பெண்கள் ட்ரூப் வைத்து நடத்தப்பட்ட அந்த கச்சேரிக்கு எங்கெல்லாமோ இருந்து வந்து கச்சேரியை ரசித்து விட்டு போயிருக்கின்றனர். சொன்னதுக்கும் அதிகமாக டிக்கெட் விலை இருந்தாலும் எல்லா டிக்கெட்களும் விற்றாகி விட்டதாம்.

rah3_cine

rahman

இதை அறிந்த ரசிகர்களுக்கு இது என்னடா சோதனை? என்று இளையராஜாவை நினைத்து புலம்பி வருகின்றனர்.

Next Story