இளையராஜாவுக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா.!? வெளியான திடுக்கிடும் தகவல்கள்..,
இளையராஜா, இந்த பெயரை கேட்டவுடன் இசைஞானி என்ற பெயர் தாமாகவே நமக்கு நினைவுக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு தனது இசையால் தற்போது பலரது நெஞ்சத்தில் குடி கொண்டிருக்கிறார் இசைஞானி இளையராஜா. தற்போதும் இரவின் மடியில் இளையராஜா பாடல்களை கேட்டு தான் பலரும் உறங்குகின்றனர் என்று கூற வேண்டும்.
இவ்வளவு புகழ் பெற்ற இளையராஜா விமர்சனங்களை சந்திக்காதவரில்லை. சர்ச்சைகளுக்குள் சிக்காதவர் இல்லை. அதுபோல அவரை தொடர்ந்து வரும் பல சர்ச்சைகள் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் இதயக்கனி எஸ்,விஜயன் பல தகவல்களை ஒரு வீடியோவில் கூறியுள்ளார்.
அதாவது, இசைஞானி இளையராஜா பெரும்பாலும் அவரது பாடல்களை அவரே பாட வேண்டும் என்று நினைப்பாராம். அரிதினும் அரிதாகத்தான் மற்ற பாடகர்கள் பாடுவதற்கு அனுமதிப்பாராம். அதேபோல இளையராஜா மிகவும் கோபப்படுவாராம்.
தற்போது தான் ஒரு இசையமைப்பாளர் இசையமைத்து விட்டால், அந்த இசை தயாரிப்பாளருக்கு சொந்தமாகி விடுகிறது. அதனை அந்த தயாரிப்பாளர் வேறு ஒரு இசை நிறுவனத்திற்கு கொடுத்து அதன் மூலம் வரும் வருவாயை பெற்று கொள்கிறார்.
ஆனால், அந்த சமயம் இளையராஜாவின் பாடல்கள் அனைத்திற்கும் அவரேதான் ராயல்டி வாங்கி வைத்தாராம். இதன் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு அந்த இசை மூலம் பெரும் வருவாய் எதுவும் கிடைப்பது இல்லையாம். மாறாக இளையராஜா இசையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது என்ற விளம்பரம் மட்டுமே கிடைக்குமாம்.
இதன் காரணமாகவே பல முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இளையராஜாவை விட்டு ஒதுங்கி வேறு புது இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பார்களாம். இயக்குனர் பாக்யராஜ் கூட தானே இசையமைக்க தொடங்கி விட்டதற்கு காரணம் இதுவாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட இளையராஜா பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் பாடியதாக கூறி அதற்கு ராயல்டி கேட்டு பெரும் சர்ச்சையானது நமக்கு நினைவிருக்கும். அதேபோல அவரது பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதற்கும் அவர் தடை விதித்திருந்தது, ராயல்டி கேட்டதும் சர்ச்சையானது. இதனையும் அவர் குறிப்பிட்டு இளையராஜாவின் இன்னொரு முகம் இதுதான் என்று வெளிப்படையாக பத்திரிக்கையாளர் இதயக்கனி எஸ்,விஜயன் தெரிவித்தார்.
இதையும் படியுங்களேன் - சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க சிம்பு.! அந்த முடிவை கைவிட்டுருங்க.! கதறும் ரசிகர்கள்.!
எது எப்படியோ ரசிகர்கள் ரசிக்கபோவது இளையராஜாவின் அழகான பாடல்களை தானே தவிர, அவரை அல்ல. அதனால் பாடல்கள் நன்றாக இருக்கிறது. அதனை நாம் கேட்டு மகிழ்வோம் அவ்வளவுதான். இளையராஜா எப்படிப்பட்டவர் என்பது அவருக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. அவர்களுக்கு மட்டுமே தேவைப்படும் உண்மையும் கூட.