பாடல்கள் அவ்வளவு சூப்பர்... ஆனாலும் படத்தில் நீக்கிய இயக்குனர்கள்!

by sankaran v |   ( Updated:2024-08-12 03:25:53  )
Ilaiyaraja
X

Ilaiyaraja

இளையராஜாவின் பாடல்கள் என்றாலே அது தேனமுதம் தான். எந்தப் பாடலையும் நாம் குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு அந்தப் பாடலை நாம் ரசித்துக் கேட்போம். 80ஸ் குட்டீஸ் மட்டுமல்ல. இப்போதைய இளைஞர்களுக்குமே இளையராஜா பாடல் என்றால் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பெரும்பாலும் கார் பயணங்களில் இளையராஜா பாடல்கள் தான் ஒலிக்கின்றன. அப்படிப்பட்ட இசைஞானி ஒரு பாடலுக்கு 7 டியூன் போடுவாராம்.

1978ல் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தில் மறக்க முடியாத பாடல் 'மலர்களே நாதஸ்வரங்கள்'. மலேசியா வாசுதேவனும், ஜானகியும் பாடிய இந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. அதே போல சட்டம் என் கையில் படத்தில் இடம்பெற்ற 'ஆழ்கடலில் தேடிய முத்து' பாடலும் படத்தில் இடம்பெறவில்லை.

அதே போல 1979ல் மணிப்பூர் மாமியார் என்ற படத்துக்காக 'ஆனந்த பூங்காற்று தாலாட்டுதே' என்ற பாடல் உருவானது. ஆனால் படத்தில் இடம்பெறவில்லை. இந்தப் பாடலுக்கு மலேசியா தேவன் குரலை மாற்றி சி.எஸ்.ஜெயராமன் குரலில் பாடினார்.

vikram

vikram

1980ல் நிழல்கள் படத்துக்காக தூரத்தில் 'நான் கண்ட உன் முகம்' பாடலை எஸ்.ஜானகி பாடினார். படத்தில் வரவில்லை. மருதாணி படத்துக்காக 'புத்தம்புது காலை' உருவானது. அந்தப் பாடல் அந்தப் படத்தில் இடம்பெறாமல் 1981ல் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு மாற்றப்பட்டது. 1986ல் விக்ரம் படத்துக்காக 'சிப்பிக்குள் ஒரு முத்து' பாடல் தயாரானது.

ஆனால் படத்தில் இடம்பெறவில்லை. 1989ல் ராஜாதி ராஜா படத்துக்காக 'உன் நெஞ்சைத் தொட்டு சொல்லு' பாடல் உருவானது. ஆனால் படத்தில் இடம்பெறவில்லை. கமல் 4 வேடங்களில் அசத்தலாக நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன். இந்தப் படத்துக்காக 'ஆடிப்பட்டம் தேடி செந்நெல் விதை போடு' பாடல் உருவானது. அது மனோ பாடியது. ஆனால் படத்தில் வரவில்லை.

அதே போல 1991ல் வெளியான தளபதி படத்துக்காக 'புத்தம் புது பூ பூத்ததோ' பாடல் தயாரானது. ஆனால் படத்தில் வரவில்லை. ஜேசுதாஸ், ஜானகியின் அற்புதமான பாடல். 1994ல் அமைதிப்படை படத்துக்காக 'சொல்லிவிடு வெள்ளிநிலவே' பாடல் உருவானது. படத்தில் வரவில்லை.
இளையராஜாவின் இந்தப் பாடல்கள் எல்லாமே சூப்பராக இருந்தாலும் அதை நீக்கிய பொறுப்பு அந்தந்த இயக்குனர்களையேச் சாரும்.

Next Story