“தம் அடிச்சா வெளுத்துப்புடுவேன்”… பிரபல நடிகரை மிரட்டிய விஜயகாந்த்… யார்ன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!!

Vijayakanth
விஜயகாந்த்தின் பெருந்தன்மையை குறித்து நாம் தனியாக கூறத்தேவை இல்லை. அந்த அளவுக்கு வள்ளலாக வாழ்ந்து வருபவர் விஜயகாந்த். பசி என்று வருவோரின் பசியை போக்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். அதே போல் உதவி என்று வருபவர்களுக்கு உடனே தேவையானதை செய்து மனநிறைவோடு வந்தவர்களை திரும்ப அனுப்புவார்.

Vijayakanth
ரயிலை நிப்பாட்டிய விஜயகாந்த்
விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது ஒரு முறை சக நடிகர்கள் சினிமா கலைஞர்கள் பலருடனும் ஒரு கலை நிகழ்ச்சியை முடித்துவிட்டு தனி ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது ரயிலில் பயணித்த சக நடிகர்களும் கலைஞர்களும் சாப்பிடாமல் இருந்தது தெரிய வந்தது.

Vijayakanth
உடனே செயினை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார் விஜயகாந்த். கீழே இறங்கி வெகு தூரம் நடந்து ஒரு ஹோட்டலை கண்டுபிடித்தார். அங்குள்ள உணவுகள் அனைத்தையும் ஆள் வைத்து தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார் விஜயகாந்த். தன்னுடன் இருப்பவர்களின் பசியை போக்க விஜயகாந்த் எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்குவார் என்பதற்கு சிறந்த உதாரணம் இதுதான்.
சக நடிகர்களை மதித்தல்
நடிகர் சம்பத், விஜயகாந்த்துடன் இணைந்து நடித்த திரைப்படம் “நெறஞ்ச மனசு”. இத்திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து “பேரரசு” என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்தார். அப்போது அத்திரைப்படத்தின் இயக்குனரிடம் “சம்பத் நெறஞ்ச மனசு படத்தில் நன்றாக நடித்திருந்தார். அந்த படம் சரியாக ஓடவில்லை. ஆதலால் அவரை பேரரசு திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலாவது கொடுங்கள். சம்பத் என்றொரு நடிகர் இருக்கிறார் என்று அப்போதாவது தெரியவரும் “ என கூறி சம்பத்திற்கு வாய்ப்பு வாங்கி தந்தாராம்.

Sampath Raj
அதனை தொடர்ந்து படப்பிடிப்பின்போது விஜயகாந்த், சம்பத்தை அழைத்து “நெறஞ்ச மனசு படத்தில் நன்றாக நடித்திருந்தீர்கள். ஆனால் படம் ஓடவில்லை. இந்த படத்தில் உங்களுக்கு சின்ன ரோல்தான். எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என கூறினாராம். அதாவது சம்பத்திற்கு வாய்ப்பு வழங்கியதே விஜயகாந்த்தான், ஆனால் சம்பத்திடம் சென்று “சின்ன ரோல்தான் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” என பெருந்தன்மையாக கூறியுள்ளார்.
இளவரசு
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான இளவரசு, தான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது விஜயகாந்த் தன்னை திட்டிய சம்பவத்தை குறித்து ஒரு பொது மேடையில் பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: பூர்ணிமாவை கண்டுக்காமல் போன பாக்யராஜ்.. ‘இவ்வளவு கர்வமா இவருக்கு”… ஆனால் உண்மையான காரணம் தெரிஞ்சா சிரிச்சிடுவீங்க…

Ilavarasu
“நான் மதுரையில் ஒரு டுட்டோரியல் காலேஜில் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது அங்கே சேனா பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு திரைப்பட விநியோக கம்பெனி இயங்கிகொண்டிருந்தது. அங்கு ஒருவர் அடிக்கடி ஸ்டைலாக வருவார். அவரை அப்போது யார் என்று தெரியாது.
மாணவர்களாகிய நாங்கள் காலேஜ் முடிந்த பிறகு அங்குள்ள பஜ்ஜி கடையில் உட்கார்ந்திருப்போம். ஒரு நாள் அந்த நபர் அங்கு வந்து ‘டேய், என்னடா இங்க உட்கார்ந்துருக்கீங்க?’ என கேட்டார். நாங்கள் ‘டுட்டோரியல் காலேஜ்ல படிக்கிறோம்’ என்று கூறினோம்.

Vijayakanth
‘டுட்டோரியல் காலேஜ் பையன் இங்க என்ன பண்றீங்க?’ என கேட்டார். ‘சும்மா உட்கார்ந்திருக்கோம்’ என கூறினோம். ‘தம் அடிக்கிற வேலை எல்லாம் வச்சிக்ககூடாது. ஒழுங்கா காலேஜ் போய்டனும். சரியா’ என மிரட்டிவிட்டு போனார். அவர்தான் கேப்டன் விஜயகாந்த்” என்று இளவரசு விஜயகாந்த்தை குறித்து பகிர்ந்துகொண்டார்.