More
Categories: Cinema History Cinema News latest news

பாக்கியராஜுக்கே நோ சொன்ன இளையராஜா… அதுவும் இந்த சூப்பர்ஹிட் படத்துக்கா?

Bakkiyaraj: இயக்குனர் பாக்கியராஜ் தன்னுடைய படத்துக்கு ஒரு இசையமைப்பாளரை தேர்ந்தெடுத்து இருக்க ஆனால் அது நடக்காமல் போகிறது. கடைசியில் அந்த படத்தில் என்னதான் நடந்தது. யார் இசையமைத்தார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் முதல் படத்திலே பெரிய வெற்றியைப் பெறுவார்கள். அப்படி ஒரு இயக்குனர் தான் பாக்கியராஜ். அவரின் முதல் படமான சுவரில்லா சித்திரங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. அப்படி அவரிடம் ஒரு படம் இயக்கி தரும்படி ஏவிஎம் நிறுவனம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதையும் படிங்க: கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்! சம்பளத்தை உயர்த்த இப்படி ஒரு ஸ்கெட்சா? சூர்யா கையாளும் யுத்தி

அந்த காலத்தில் ஏவிஎம் நிறுவனத்தில் ஒரு படம் செய்தாலே பெரிய வெற்றி என்பதால் உடனே அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறார் பாக்கியராஜ். அவர்களும் உடனே கதையை எழுதிவிட்டு வந்து கூறுமாறு சொல்லிவிடுகின்றனர். அந்த கதை தான் முடிச்சு திரைப்படம்.

இப்படத்தின் கதையை எழுதும் போதே கங்கை அமரனை அழைத்து நீ தான் இந்த படத்துக்கு இசையமைக்க வேண்டும் என கூறிவிட்டாராம். ஆனால் ஏவிஎம் நிறுவனம் இப்படத்திற்கு சங்கர் கணேஷை இசையமைப்பாளராக தேர்வு செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் பாக்கியராஜ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

கதை சொல்லும் நாளும் வந்தது. கதையை பொறுமையாக ஏவிஎம் சரவணன் இக்கதைக்கு இளையராஜா இசையமைத்தால் பொருத்தமாக இருக்கும் என்றாராம். ஆனால் பாக்கியராஜ் மீண்டும் ஒப்புக் கொள்ளாமல் கங்கை அமரன் தான் வேண்டும் என முரண்டு பிடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: என்னது மகள் முறையா? சர்ச்சைக்குள்ளான வேல ராமமூர்த்தியின் திருமணம்.. பின்னனியில் நடந்த சம்பவம் இதோ

இவரை ஒப்புக்கொள்ள விரும்பிய ஏவிஎம் சரவணன் கங்கை அமரனை அழைத்து இந்த விஷயத்தை கூறியிருக்கிறார். அவரும் சரியாகப் புரிந்து கொண்டு இளையராஜாவே இசையமைக்கட்டும் என்று பாக்கியராஜிடம் பேசி சம்மதம் வாங்கினாராம். அதைத்தொடர்ந்து ஏவிஎம் நிறுவனம் இளையராஜாவிடம் முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு இசையமைக்க கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

ஆனால் இளையராஜா முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். இதனால் பாக்கியராஜ் மற்றும் இளையராஜாவிற்கு ஏதோ மனக்கசப்பு இருப்பதாக ஏவிஎம் நிறுவனம் கவலை கொண்டது. அதை தானே சரி செய்வதாக கூறி பாக்யராஜ் நேரில் பார்க்க சென்றாராம். அவரை சந்தித்து ஏன் என் படத்திற்கு இசையமைக்க மாட்டீர்கள் என கேட்டிருக்கிறார்.

மீண்டும் என்னிடம் முதல்ல வந்த கங்கை அமரிடம் தானே முதலில் போனாய் நான் இசை அமைக்க முடியாது என கூறினாலும் அவர் முகத்தில் ஒரு சிரிப்பு இருந்ததாம். இதனால் அவரிடம் சற்று கேலியாக பேசி  கடைசியில் சம்மதிக்க வைத்து முந்தானை முடிச்சு திரைப்படத்தில் இசையமைக்க வைத்தாராம் பாக்யராஜ்.

இதையும் படிங்க: அரசியல் களத்தில் இறங்குவதற்கு முன்னர் எல்லாரையும் கவர் செய்யும் விஜய்… எங்க நிக்கிறாரு பாருங்க!

Published by
Akhilan

Recent Posts