அந்த பாட்டை கேட்டுதான் இந்த பாட்டை போட்டேன்… ஆட்டைய போட்டதை ஓபனாக ஒப்புக்கொண்ட இளையராஜா…

0
251

Ilayaraja: இசையமைப்பாளர் இளையராஜா எப்போதுமே தனக்கு தோன்றியதை எந்த இடமாக இருந்தாலும் யோசிக்காமல் பேசிவிடுவார். அப்படி அவர் பேசுவது சில நேரங்களில் கேட்பவரை கடுப்பேற்றியதும் தவறாமல் நடந்து இருக்கிறது. அப்படி ஒரு சம்பவத்தினை பிரபல விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் பேட்டியில் இருந்து, இளையராஜா பயோபிக்கில் எப்போதுமே நல்லதை சொல்லி எடுத்தால் அது படமாக இருக்கும். ஒரு உண்மையான பயோபிக்கில் உண்மை முகங்களும், சில கசப்பான முகங்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும். இளையராஜாவின் வாழ்க்கை அப்படிப்பட்டது. அவர் பிஸியாக இருந்த காலக்கட்டத்தில் கூட அவரை நேரில் சென்று பார்க்கும் தைரியம் ரஜினி மற்றும் கமலுக்கு தான் இருந்தது.

இதையும் படிங்க: ஜெய்சங்கரிடம் எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி!.. அதுக்கு பின்னால் இருக்கும் ஸ்டோரி இதுதான்!..

ஒருமுறை ரஜினி இளையராஜாவை சந்திக்க வந்தார். இருவரும் சாமி என்று தான் பேசிக்கொள்வார்களாம். அவர்கள் வெளியில் போகும் போது ரஜினி தான் காரை ஓட்டி செல்வாராம். இந்த பயோபிக்கில் வைரமுத்து, இளையராஜாவுக்குமான பிரச்னையை சொல்ல வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானை எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதை சொல்லினால் தான் அது சரியாக இருக்கும்.

இயக்குனர் பாசிலுக்கு, இளையராஜாவை அவ்வளவு பிடிக்குமாம். அப்படி அவர் இயக்கிய மலையாள படத்தினை தமிழில் உருவாக்க நினைத்தார்களாம். அதற்கு பாசில் வைக்கும் ஒரே கண்டிஷன் இளையராஜா தான் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பதே. தயாரிப்பாளர் அதற்கு போராட ஒரு வருசம் கழித்தே அப்பாயின்மெண்ட் கிடைக்கிறதாம்.

இதையும் படிங்க: அந்த எம்.ஜி.ஆர் படத்தில் பிடிக்காமல்தான் நடித்தேன்!. ஓப்பன் பேட்டி கொடுத்த ஜெயலலிதா!..

மலையாள படத்தினை பார்த்த இளையராஜாவுக்கு அதில் வரும் பாடல் ரொம்பவே பிடித்து போகிறது. சித்ராவின் அறிமுக பாடல் தான் அது. அவரையே தமிழுக்கு அழைத்து வந்து பூவே பூச்சுடவா பாடலை பாட வைக்கின்றனர். இந்த பாடலை சித்ரா பாடி முடித்ததும் மொத்த ஆர்டிஸ்ட்டும் கைத்தட்டுகின்றனராம். இந்த கைத்தட்டல் யாருக்கு எனக் கேட்க அவர்கள் எல்லாம் இளையராஜாவை கைக்காட்டுகின்றனர்.

ஆனால் இளையராஜா இந்த பாட்டின் பாராட்டுக்கு உரியவர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். பாசமலர்கள் படத்தில் வந்த மலர்ந்தும் மலராத பாடலின் பிம்பம் தான் பூவே பூச்சுடவா பாடல் என்றாராம். இதை கேட்ட அங்கிருந்தவர்கள் வாய் பிளந்தனராம். கோலிவுட்டின் கடவுள் என அழைக்கப்படும் இளையராஜா இப்படி பேசுகிறாரே என வாய் அடைத்து போனார்களாம்.

google news