Cinema History
இசை சொல்லி கொடுத்த குருவிடமே சவால் விட்ட இசைஞானி!.. ராஜான்னா சும்மாவா!..
Ilayaraja: 70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து 20 வருடங்கள் தனது இசையால் திரையுலகையும், ரசிகர்களையும் கட்டி ஆண்டவர் இசைஞானி இளையராஜா. அறிமுகமான ‘அன்னக்கிளி’ படத்திலேயே அற்புதமான பாடல்களை கொடுத்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.
80களில் ராஜாவின் இசையை நம்பியே 90 சதவீத திரைப்படங்கள் உருவானது. ராஜா இசையமைக்க சம்மதித்துவிட்டால் அந்த படம் ஹிட் என்றே கணித்த காலம் அது. படத்தின் கதாநாயகன், கதாநாயகி யார் என முடிவாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் இளையராஜாவை ஒப்பந்தம் செய்துவிடுவார்கள்.
இதையும் படிங்க: ரஜினிக்காக எஸ்.பி.பி மிகவும் கஷ்டப்பட்டு பாடிய பாடல்!.. பெண்டு கழட்டிய இளையராஜா..
அந்த அளவுக்கு ஒரு படத்தின் வெற்றிக்கு அவர் தேவைப்பட்டார். இளையராஜா ஏதோ இசைக்கச்சேரிகள் நடத்தி வந்து அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார் என பலரும் நினைக்கிறார்கள். அதுதான் இல்லை. அவர் எல்லா இசை கருவிகளையும் முறையாக பலரிடமும் கற்றவர்.
இளையராஜாவுக்கு கிடார், பியானோ மற்றும் வெஸ்டர்ன் இசையை சொல்லிக்கொடுத்தவர் தன்ராஜ் மாஸ்டர். ஆனால், காலையில் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரில் வேலை, மாலை இசைக்கச்சேரிகள் என ராஜா பல வேலைகளையும் செய்து வந்ததால் அவரால் தன்ராஜ் மாஸ்டர் வகுப்புக்கு சரியாக செல்ல முடியவில்லை. இசையில் 8வது டிகிரியை ராஜா வாங்க வேண்டும் என தன்ராஜ் ஆசைப்பட்டார்.
ஒரு நாள் ராஜாவிடம் ‘நீ கண்டிப்பாக 8வது டிகிரியை தேர்ச்சி பெறவேண்டும். அது உன் எதிர்காலத்துக்கு நல்லது. உடனே அந்த தேர்வுக்கு பணத்தை கட்டு’ என சொல்ல ராஜாவும் பணத்தை கட்டிவிட்டார். ஆனாலும், வகுப்புக்கு சரியாக செல்லவில்லை. ஒருநாள் ராஜா வகுப்புக்கு சென்றபோது ‘இனிமேல் என் வகுப்புக்கு நீ வராதே’ என மிகவும் கோபத்துடன் சொல்லிவிட்டார்.
இதையும் படிங்க: அந்த விஷயத்தில் கில்லாடி இளையராஜாதான்… அவரை அடிச்சிக்க ஆளே இல்லை..!
அவரிடம் ராஜா ‘எனக்கு சொல்லி கொடுக்க மாட்டேன்னு சொல்றீங்க. நானே பயிற்சி எடுத்து 8வது டிகிரியை பாஸ் பண்ணி அந்த வெற்றியை உங்கள் காலடியில் சமர்பிப்பேன்’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். சொன்னதுபோலவும் செய்தும் காட்டினார். அந்த தேர்வில் 84 மார்க் எடுத்தால் ஹானர்ஸ் என சொல்வார்கள். இளையராஜா 85 மார்க் எடுத்திருந்தார்.
இதற்கு காரணம் ராஜாவிடம் இருந்த நம்பிக்கை மட்டுமல்ல. அவரின் உழைப்பு, விடாமுயற்சி, இசையில் அவர் காட்டிய ஆர்வம் என எல்லாவற்றையும் சொல்லாலாம். இப்படி தனது குருவிடமே சவால் விட்டு ஜெயித்து காட்டி பெருமை சேர்த்தவர்தான் இசைஞானி இளையராஜா.
இதையும் படிங்க: இந்திப்பாடகியையே அழ வைத்த இளையராஜாவின் இசை… அவ்ளோ உருக்கமான பாடலாம்!..