உலக அளவில் இசையில் மிகப்பெரிய சாதனைப் படைத்தவர்களில் இசைஞானி இளையராஜாவும் முக்கியமானவர். கிட்டத்தட்ட 1500 பாடல்களுக்கு மேல் இசையமைத்தவர். தமிழக நாட்டுப்புற இசையும் கர்நாடக இசை, மேற்கத்திய இசை என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர்.
ஏகப்பட்ட விருதுகளை பெற்றவர். 4 முறை தேசிய விருதுகளையும் மாநில அரசுகளையும் வென்றவர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தன் ஆளுமையை வெளிப்படுத்தியவர். இன்று வரை தன்னுடைய பசுமையான இசையால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இவருடைய இசை ஒரு பக்கம் நம் மனதை உருக வைத்தாலும் இவரது இசையோடு எஸ்.பி.பி.யின் குரலில் பாடலை கேட்கும் போது இந்த உலகத்தையே மெய்மறந்து விடுகிற அளவுக்கு கொண்டு போய்விடும். எஸ்.பி.பியும் அனைத்து மொழிகளிலும் இட்டத்தட்ட ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி சாதனைப்படைத்திருக்கிறார்.
80களில் இவர்கள் இருவரின் கூட்டணி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஏதோ ஒரு புது உலகத்திற்கே கொண்டு போனது. பாடல்களை கேட்கும் போது ஒரு இனம் புரியாத உணர்வை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இப்படி இருவரும் சேர்ந்து பல சாதனைகளை படைத்திருக்கும் போது இருவரும் செய்யாத ஒரு சாதனை இருக்கின்றது.
எஸ்.பி.பி. 6 தேசிய விருதுகளை பெற்றிருக்கும் போது அந்த விருதுகளில் ஒரு விருது கூட தமிழில் இளையராஜா ‘இசையில் கிடைத்த விருது இல்லை. அதில் தமிழில் ஒரு படத்திற்கு மட்டுமே தேசிய விருது வாங்கியிருக்கிறார். மின்சாரக்கனவு படத்திற்காக ஏஆர் ரகுமான் இசையில் அமைந்த தங்கத்தாமரை பாடலுக்காக மட்டுமே.
மேலும் இரண்டு விருதுகள் இளையராஜா இசையில் தெலுங்கில் வாங்கியிருக்கிறார். சாகரசங்கமம் என்ற தெலுங்கு படத்திற்காகவும் ருத்ரவீணை என்ற மற்றுமொரு தெலுங்கு படத்திற்காகவும் மட்டுமே இளையராஜா இசையில் தேசிய விருது பெற்றிருக்கிறார் எஸ்.ப்.பி. ஆனால் இதுவரை தமிழில் இசைஞானி இசையில் எஸ்.பி.பி, தேசிய விருதை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எம்.ஜி.ஆரை பிடிக்காமல் படப்பிடிப்பில் பாடாய்படுத்திய இயக்குனர்.. பின்னாடி நடந்ததுதான் டிவிஸ்ட்!.
நடிகர் சூர்யாவை…
பைரவி படத்தின்…
அமரன் திரைப்படம்…
Rajinikanth: நடிகர்…
பல பேர்…