இன்னும் பெட்டரா வேணும்!.. பாக்கியராஜ் சொன்னதில் கடுப்பாகி கத்திய இளையராஜா.. அந்த சூப்பர் ஹிட் பாட்டா!..

80களில் இளையராஜாவின் இசையை நம்பியே பல படங்கள் உருவானது. எனவே, இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்களை காப்பாற்ற வந்த கடவுளாகவே இளையராஜாவை பார்த்தனர். பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்தார் இளையராஜா.

எனவே, தங்களின் படங்களுக்கு இசையமைக்க அவர் ஒப்புக்கொண்டால் போதும் என்றே அப்போது எல்லோரும் நினைத்தார்கள். ஒரு படத்தை துவங்கும்போது இளையராஜா கமிட் செய்து விட்டே தயாரிப்பாளர்கள் மற்ற வேலையை துவங்குவார்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தார் அவர்.

இதையும் படிங்க: குழந்தைகளுடன் வெளிநாட்டில் கொஞ்சி விளையாடும் லேடி சூப்பர்ஸ்டார்!.. ட்வின்ஸ் நல்லா வளர்ந்துட்டாங்களே!

ஆனால், அவரிடம் சண்டை போட்ட சில இயக்குனர்களும் இருக்கிறார்கள். இயக்குனர் பாலச்சந்தர் பல வருடங்கள் இளையராஜா பக்கம் போகவே இல்லை. கமல் சொன்னதால் 6 படங்களில் அவரை பயன்படுத்தினார். அதேபோல், பாக்கியராஜ் துவக்கத்திலிருந்து இளையராஜாவுடன் மோதல் போக்கை கடைபிடித்தார்.

இளையராஜா டியூன் அவருக்கு பிடிக்கவில்லை எனில் அப்படியே ராஜாவிடம் சொல்லிவிடுவார். இது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும். தான் இயக்கி நடித்த மௌன கீதங்கள் படத்தில் கூட இளையராஜாவிடம் போகாமல் அவரின் தம்பி கங்கை அமரனை இசையமைக்க வைத்தார். அதனால், பாக்கியராஜ் மீது ராஜாவுக்கு கோபம் வந்தது.

இதையும் படிங்க: திறமை இருந்தும் கதைல கோட்ட விடுற நடிகர்கள்! ஒரு படத்துல மட்டும் பேர் எடுத்தா போதுமா?

ஆனாலும், பாக்கியராஜின் சில படங்களுக்கு அவர் இசையமைத்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பாக்கியராஜ் முந்தானை முடிச்சி படத்தை எடுத்தபோதுதான் பாக்கியராஜுக்கும், ராஜாவுக்கும் அதிகமாக முட்டிகொண்டது. ‘அந்தி வரும் நேரம்’ பாடலுக்கு அற்புதமான பின்னணி இசையை அமைத்திருந்தார் ராஜா. அவர் அதை வாசித்துக்காட்ட ’எனக்கு பிடிக்கவில்லை’ என பட்டென சொல்லிவிட்டார் பாக்கியராஜ்.

இதனால் கோபப்பட்டு ராஜா கத்த ரிக்கார்டிங் தியேட்டரிலிருந்து வெளியே போய்விட்டார் பாக்கியராஜ். அதன்பின் நானே இசையமைக்கிறேன் என சொல்லி அவர் இயக்கிய சில படங்களுக்கு பாக்கியராஜே இசையமைத்தார். மேலும், ராஜா பக்கம் போகாமல் சந்திரபோஸ் போன்ற இசை அமைப்பாளர்களை தனது படங்களில் பயன்படுத்தினார் பாக்கியராஜ்.

 

Related Articles

Next Story