Cinema History
இசையமைப்பாளர் ஆகலனா இந்த வேலைதான் செஞ்சிருப்பேன்!.. ஓப்பனா சொல்லிட்டாரே இளையராஜா!…
Ilayaraja: இசைஞானியாக வலம் வருபவர் இளையராஜா. 80களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்தவர். இவர் இசை இல்லையெனில் பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் படம் எடுக்க மாட்டார்கள். ஒரு படத்தை துவங்கும்போது இளையராஜாவை உறுதி செய்துவிட்டுதான் மற்ற வேலையை துவங்குவார்கள்.
அந்த அளவுக்கு ஒரு படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசை முக்கியமாக இருந்தது. ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ், கார்த்திக், மோகன், ராமராஜன் என 80களில் முன்னணி நடிகர்கள் எல்லோருமே தங்கள் படங்களுக்கு இளையராஜா மட்டுமே இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இதையும் படிங்க: எஸ்.பி.பிக்கு மாற்றாக மனோவை கொண்டு வந்த இளையராஜா!.. மாஸ்டர் பிளானா இருக்கே!…
தேனி மாவட்டத்திலிருந்து இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தவர்தான் இளையராஜா. துவக்கத்தில் தனது சகோதரர்களுடன் இணைந்து இசைக்கச்சேரிகளை நடத்தி வந்தார். பல கம்யூனிச மேடைகளில் இவர்களின் பாடல் ஒலித்தது. அதன்பின் சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக வேலை செய்தார் இளையராஜா.
கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அன்னக்கிளி திரைப்படம் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைக்க ராஜாவின் இசை ராஜாங்கம் துவங்கியது. 80களில் பல அற்புதமான, மனதை மயக்கும் பாடல்களை கொடுத்தார் இளையராஜா.
இதையும் படிங்க: என்னை அவமானப்படுத்தினார் எம்.எஸ்.வி! மறக்கவே மாட்டேன்! இளையராஜா சொல்றத கேளுங்க!..
படம் மொக்கையாக இருந்தாலும் அவரின் பாடல்களுக்காகவே படத்தை பார்த்தவர்கள் பலரும் இருக்கிறார்கள். பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசையிலும் கலக்கினார் ராஜா. இப்போது 80 வயதை கடந்துவிட்டாலும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரின் இசைக்கச்சேரி பல ஊர்களிலும் நடந்து வருகிறது.
இந்நிலையில், ‘நீங்கள் இசையமைப்பாளர் ஆகாமல் இருந்திருந்தால் என்ன வேலை செய்திருப்பீர்கள்?’ என விழா ஒன்றில் கல்லூரி மாணவி கேட்க அதற்கு பதில் சொன்ன ராஜா ‘இசையமைப்பாளர் ஆகவில்லை எனில் இசைக்கருவிகளை வாசிக்கும் ஒரு இசைக்கலைஞராகவே இருந்திருப்பேன். எனக்கு அதுதான் தெரியும்’ என பதில் கூறினார்.