ஏற்கனவே நேரம் சரியில்லை.. இதுல இது வேறையா.. அறிவிக்கப்பட்ட இளையராஜா பியோபிக்.. ஹீரோ இவர்தானா..?
Ilayaraja: இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் முக்கிய அறிவிப்பு ஒருவழியாக ரிலீஸாகி இருக்கும் நிலையில், இப்படத்தில் ரசிகர்களுக்கு நிறைய ஆச்சரியங்களும் இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.
தமிழ் சினிமாவுக்கு பயோபிக் என்பது புதிய விஷயமல்ல. ஆனால் சிலரின் வாழ்க்கை வரலாற்று படம் தான் ஹிட் அடித்து இருக்கிறது. அதில் முக்கியமாக சொல்லப்படுவது சூரரைப்போற்று. இப்படம் ஆஸ்கார் நாமினி வரை சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரு பேட்டி கொடுத்து வாய்ப்பு பிடித்த டைரக்டர்… தளபதி69ஐ இயக்க போவது இவர் தானா..?
இந்நிலையில் மீண்டும் ஒரு முக்கிய பயோபிக் கோலிவுட்டில் உருவாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்கும் ஐடியாவில் இருப்பதாக ஒரு தகவல் கசிந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மீடியா இணைந்து தயாரிக்க இருக்கும் இப்படத்தில் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இப்படம் கிட்டத்தட்ட 925 கோடி செலவில் பல மாநில ஸ்டார்கள் நடிக்க இருக்கிறார்கள். அடுத்த வருடம் அக்டோபரில் தொடங்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து 2025ன் நடுவில் படத்தினை ரிலீஸ் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜப்பானுக்கே காவடி எடுத்தாலும் படம் ஜெயிக்காதுடி!.. கார்த்தியை காவு வாங்கிய ஜப்பான்.. விமர்சனம் இதோ!..
தனுஷ் தற்போது தன்னுடைய 50வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதையடுத்து சேகர் கம்முலாவின் பேன் இந்தியா படத்தினை முடித்து விட்டே பயோபிக் படத்தில் இணைவார் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் ப்யோபிக்கில் தனுஷ் நடிப்பது அவரின் ரசிகர்களுக்கு அதிருப்தியாகி இருக்கிறதாம்.
மேலும், நான்கு வருடங்களாக பேச்சுவார்த்தையில் இந்த கதை இருந்ததாகவும், இந்த படத்தின் முழு கதையையும் இளையராஜாவே தன் கைப்பட எழுதுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தினை பிரபல இயக்குனர் பால்கி இயக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
COPYRIGHT 2024
Powered By Blinkcms