Cinema History
கையில் பத்து ரூபாய்!.. சென்னைக்கு ரிக்ஷாவில் வந்து இறங்கிய இளையராஜா!.. பாரதிராஜா சொன்ன சீக்ரெட்!..
தமிழ் சினிமாவில் இப்போதும் இசை மேதையாக வலம் வருபவர் இளையராஜா. 80,90களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். இளையராஜா இசையமைக்கிறார் என்றால் அந்த படங்கள் விற்பனை ஆகிவிடும். பல மொக்கை படங்களையும் தனது பாடல்களால், பின்னணி இசையால் ஓடவைத்தவர் அவர். அதனால்தான் அவரை மட்டுமே நம்பியே பல படங்கள் உருவாகிய காலம் அது. இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஆபத்பாந்தவனாக இளையாராஜா இருந்தார்.
சிறுவயது முதலே இசையில் அதிக ஆர்வம் கொண்டவராக ராஜா இருந்தார். இளையராஜா, அவரின் அண்ணன் பாஸ்கர், தம்பி கங்கை அமரன் எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள். ராஜாவும், பாஸ்கருக்கும் இசை ஆர்வமும், கங்கை அமரனுக்கு பாடல்கள் எழுதும் ஆர்வமும் அதிகமாக இருந்தது. வாலிப வயது முதலே அவர்கள் அனைவருக்கும் இயக்குனர் பாரதிராஜா நண்பராக இருந்தார். அரசு வேலையை விட்டு சினிமா ஆசையில் சென்னைக்கு முதலில் வந்தவர் பாரதிராஜாதான். சிவாஜி போல பெரிய நடிகராக வேண்டும், நாடகம் போட வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது.
இதையும் படிங்க: என் கேரியரை காலி பண்ணதே நீதான்!.. பாரதிராஜாவை மேடையிலேயே திட்டிய எம்.ஜி.ஆர்..
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய பாரதிராஜா ‘நாங்கள் எல்லோரும் ஒரு கேங்காக இருந்தாலும் நான் முதலில் சென்னை வந்துவிட்டேன். தி.நகர் ரங்கநாதன் தெருவுக்கு எதிரே இருந்த ஒரு தெருவில் 4 பேருடன் தங்கியிருந்தேன். ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டே, அதில் காசு சேர்த்து நாடகம் போட திட்டமிட்டேன். 60 ரூபாய் இருந்தால் நாடகம் போடலாம்.
அப்படி 60 ரூபாயை சேர்த்துவிட்டு தியேட்டர் பிடிக்க தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது எதிரே சைக்கிள் ரிக்ஷாவில் இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் மூவரும் வந்து இறங்கினார். இளையராஜா என்னிடம் ‘நாங்களும் சென்னை வந்துவிட்டோம். என்னிடம் 10 ரூபாய்தான் இருக்கிறது’ என்றான். அவர்களை அழைத்துகொண்டு அறைக்கு சென்றேன். எங்களை பார்த்த ஹவுஸ் ஓனர் சில நாட்களிலேயே வீட்டை காலி செய்ய சொல்லிவிட்டார்’ என பேசியிருந்தார்.
இதையும் படிங்க: சிவாஜிக்கு சவால் விட்டு கிளம்பிய பாரதிராஜா!.. நடிகர் திலகம் அடித்த கமெண்ட்டுதான் ஹைலைட்!…