இரண்டரை மணி நேரத்தில் ராஜா போட்ட ஏழு பட்டு!.. எல்லாமே ஹிட்டு!.. என்ன படம் தெரியுமா?!..
திரையுலகில் பல வருடங்கள் பல ஆயிரம் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் இசைஞானி இளையராஜா. 15 வருடங்கள் தமிழ் சினிமாவை கட்டி ஆண்டவர். இவரின் பாடல்களுக்காகவே பல திரைப்படங்கள் ஓடியது. இவரின் இசைக்காகவே தியேட்டருக்கு போன ரசிகர்களும் இருந்தனர். கதையே இல்லாத படங்களை கூட ராஜா தனது இசையால் வெற்றி பெற வைத்தார். அதனால்தான் அவரின் அலுவலகம் முன்பு இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் அவருக்காக காத்திருந்தனர்.
தற்போது ரசிகர்கள் பலரும் சிலாகித்து கேட்கும் இளையராஜாவின் பல பாடல்கள் அவர் சொற்பமான நேரத்தில் இசையமைத்ததுதான். சில சமயம் ஒரு படத்தின் முழு பாடல்களையும் கூட சில மணி நேரங்களில் ராஜா கம்போஸ் செய்து விடுவார். அந்த பாடல்களும் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் பாடலாக இருக்கும்.
திரையுலகில் என் ராசாவின் மனசிலே திரைப்படம் மூலம் நடிகரானவர் ராஜ்கிரண். அப்படத்திற்கும் ராஜாவே இசையமைத்திருந்தார். அதன்பின் ராஜ்கிரண் நடித்த பல படங்களுக்கும் அவர்தான் இசையமைத்தார். அப்படி ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி திரைப்படத்திற்கும் ராஜாதான் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே அதிரி புதிரி ஹிட் அடித்தது. அதிலும் ராசாவே உன்னை விடமாட்டேன், பூங்குயிலே பூங்குயிலே கேளு, ராத்திரியில் பாடும் பாட்டு ஆகியவை மனதை மயக்கும் மெலடி பாடல்களாகும். அதேபோல், அம்மாவை இழந்து ராஜ்கிரண் பாடும் ‘என் தாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட’ பாடலும் ரசிகர்களை அழ வைத்தது.
இப்படத்தில் இடம் பெற்ற ஏழு பாடல்களையும் காலை 7.30 மணிக்கு துவங்கி 9.30 மணிக்கு முடித்துவிட்டாராம் இளையராஜா. அதாவது 2 மணி நேரத்தில் அப்படத்திற்கு தேவையான அனைத்து பாடல்களுக்கும் அவர் எடுத்துக்கொண்ட நேரம் இரண்டு மணி நேரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இப்படி பாத்தா நாங்கலாம் க்ளீன் போல்டு!.. நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா..