ஆல்பத்திலிருந்து சுட்டு ரஜினிக்கு பாட்டு போட்ட இளையராஜா!.. இது மட்டும் நியாயமா?!…

by சிவா |   ( Updated:2025-04-17 02:33:01  )
ilayaraja
X

கடந்த சில வருடங்களாகவே இசைஞானி இளையராஜா தனது பாடல்களை முறையான அனுமதி பெறாமல் திரைப்படங்களில் யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறார். இதனால் அவரை பணத்தாசை பிடித்தவர் என பலரும் விமர்சிப்பது உண்டு. ஆனால், என்னை பற்றி வரும் விமர்சனங்களை பார்க்க கூட எனக்கு நேரமில்லை. இசை மீது மட்டுமே என் கவனம் என சொல்லி வருகிறார் இளையராஜா.

இளையராஜா சம்பளம் வாங்கி கொண்டு இசையமைத்த பின் அந்த பாடல்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு சொந்தம்.. அந்த பாடல் உரிமைகளை அவர் ஒரு நிறுவனத்திடம் விற்றுவிட்டால் அந்த நிறுவனத்திற்கே சொந்தம். படங்களில் இளையராஜா பாடல்களை பயன்படுத்தும்போது எந்த நிறுவனத்திடம் உரிமை இருக்கிறதோ அவர்களுக்கு பணம் கொடுத்து விடுகிறார்கள். இதில் இளையராஜா நோட்டீஸ் அனுப்புவதில் நியாயம் இல்லை என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

ஆனால், அறிவுசார் சொத்து என்கிற அடிப்படையில் இளையராஜா நோட்டீஸ் அனுப்புகிறார் என்கிறார்கள் அவரின் வழக்கறிஞர்கள். குட் பேட் அக்லி படத்தில் அவரின் 3 பாடல்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு 5 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் இளையராஜா. ஆனால், எந்த நிறுவனத்திடம் பாடல்களுக்கான உரிமை இருந்ததோ அவர்களிடம் என்.ஓ.சி வாங்கிவிட்டோம் என சொல்லியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

ஒருபக்கம், இளையராஜாவே பல ஹிந்தி மற்றும் ஆங்கில பாடல்களை காப்பியடித்து பாடல்களை போட்டிருக்கிறார். அவர்களெல்லாம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினால் இவர் பணம் கொடுப்பாரா என ஒரு தரப்பினர் சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள். 40 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையீ’ பாடலை காப்பி அடித்துதான் ராஜா ‘ஒத்த ரூபாயும் தாரேன்’ பாடலையே போட்டார் என்கிறார்கள் சிலர்.

மேலு,ம் SKY BAND குழுவின் LA DANZO ஆல்பம் வெளிவந்த ஆண்டு 1979. அந்த ஆல்பத்தில் வரும் இசையை காப்பி அடித்துதான் ராஜா முரட்டுக்காளை படத்தில் வரும் ’எந்த பூவிலும் வாசம் உண்டு’ பாடலையே உருவாக்கினார். முரட்டுக்காளை வெளிவந்த ஆண்டு 1980 என ஆதாரத்தோடு ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Next Story