Cinema News
5 வயதிலேயே டியூன் போட்ட யுவன்!.. அதை காப்பி அடித்த இளையராஜா!. அட இது அவரே சொன்னது!…
Ilayaraja: இளையராஜாவின் இரண்டு மகன்களில் அதிக படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. மூத்த மகன் கார்த்திக் ராஜா தனது அப்பா பிஸியாக இருக்கும்போது அவருக்கு உதவியாக பல படங்களில் வேலை செய்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் சில படங்களுக்கு அவரே இசையமைத்தார்.
ஆனால், படங்களில் அவரின் பெயர் வராது. இசை இளையராஜா என்றே வரும். ரஜினி நடித்து வெளியான பாண்டியன், ரஜினி கதை எழுதி தயாரித்த வள்ளி ஆகிய படங்களுக்கு கார்த்திக் ராஜாதான் இசையமைத்தார். ஆனால், படத்தின் டைட்டிலில் அவர் பெயர் வராது. இப்படி சில படங்கள் இருக்கிறது.
தன்னுடைய வாரிசாக கார்த்திக் ராஜாவே வருவார் என இளையராஜா எதிர்பார்த்தார். ஆனால், அவரே எதிர்பாக்காத படி யுவன் சங்கர் ராஜாவே அதிக படங்களுக்கு இசையமைத்தார். யுவன் சங்கர் ராஜாவுக்கு இசையமைப்பாளராக வேண்டும் என்கிற ஆசையே இருந்தது இல்லை என்பது பலருக்கும் தெரியாது.
இதுபற்றி ஒரு பேட்டியில் சொன்ன யுவன் ‘எனக்கு ஃபைலட் ஆக வேண்டும் என்பது ஆசை. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் இளைஞர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நேரம் ‘இனிமே ஏ.ஆர்.ரஹ்மான்தான். உங்க அப்பா அவ்வளவுதான்’ என என் நண்பர்களில் சிலர் சொன்னர்கள். அந்த கோபத்தில்தான் நானும் இசையமைப்பாளராக வேண்டும் என முடிவெடுத்தேன்’ என சொல்லி இருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா 5 வயதிலேயே டியூன் போடுவாராம். ஒரு இசை நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா ‘யுவன் 5 வயதில் போட்ட ஒரு மெட்டை பிரபு நடித்து வெளியான ஆனந்த் என்கிற படத்தில் ‘பூவுக்கு பூவாலே மஞ்சம் ஒன்று’ பாடலாக போட்டேன். அவனின் இசையை காப்பி அடித்து நான் உருவாக்கிய பாடல் அது’ என சொல்லி இருக்கிறார்.
திறமையான இசையமைப்பாளராக இருந்தும் பாடல்களை உருவாக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்வதாலும், அவரை தொடர்பு கொள்வதே சிரமம் என்பதாலுமே இயக்குனர்கள் பலரும் யுவன் சங்கர் ராஜா பக்கம் போவாதில்லை என்பதே நிஜம். அவர் மட்டும் சோம்போறித்தனம் பார்க்காமல் அப்பாவை போல அர்ப்பணிப்போடு இசையமைத்தால் இப்போது நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருப்பார் என திரையுலகில் பலரும் சொல்வதுண்டு.