காப்பி ரைட்ஸ் அதாவது காப்புரிமை என்கிற வார்த்தையை கடந்த சில வருடங்களாகவே இளையராஜா வழியாக ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இதன் அர்த்தம் தனக்கு சொந்தமான ஒன்றை மற்றொருவர் வியாபார ரீதியாக பயன்படுத்தும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு ஒருவர் நஷ்ட ஈடும் கேட்க முடியும்,. இதைத்தான் இளையராஜா பல வருடங்களாக கேட்டு வருகிறார்.
20, 30 வருடங்களுக்கு முன்பு அவர் இசையமைத்து சூப்பர் ஹிட் ஆன பாடல்களை இப்போது எடுக்கப்படும் படங்களின் சில காட்சிகளில் இயக்குனர்கள் பயன்படுத்துகிறார்கள். கட்சிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதோடு, அது ரசிகர்களிடமும் வரவேற்பை பெறுவதால் இதை பல இயக்குனர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இளையராஜா தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு அந்த பாடல்களை போட்டு கொடுத்துவிட்டார். அதன்பின் அந்த பாடல்கள் தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தம். அந்த தயாரிப்பாளர் அந்த பாடல்களின் உரிமை ஒரு ஆடியோ நிறுவனத்திற்கு விற்றுவிடுவார். எனவே, அந்த நிறுவனத்திடமே பாடல்களின் உரிமை இருக்கும். திரைப்படங்களில் அந்த பாடல்கள் பயன்படுத்தப்படும்போது தயாரிப்பு நிறுவனம் அந்த ஆடியோ நிறுவனத்திடம் கணிசமான தொகை கொடுத்துவிடுவார்கள். சிலர் கொடுக்காமலும் விடுவார்கள். ஆடியோ நிறுவனம் நீதிமன்றம் போனால் அதன்பின் ஒரு தொகையை கொடுப்பார்கள்.

ஆனால், அந்த பாடல்களை உருவாக்கியவர் என்கிற முறையில் அறிவுசார் சொத்து என்பதன் அடிப்படையில் இளையராஜா உரிமை கோருகிறார். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கூட கண்மணி பாடலை பயன்படுத்தியதற்கு நீதிமன்றம் போனார். அவருக்கு 60 லட்சம் வரை கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான், சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த குட் பேட் அக்லி படத்தில் வரும் ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ உள்ளிட்ட 3 பாடல்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார் இளையராஜா. இது சரிதான் என சிலரும், இளையராஜாவுக்கு காசு ஆசை என்று பலரும் வழக்கம்போல் அவரை விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இளையராஜா இசையமைத்த ‘ஒத்த ரூபாயும் தாரேன்’ பாடலே நாட்டுப்புற பாடலான ‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையீ. யாரு வச்ச மய்யீ. இது நான் வச்ச மய்யீ’ பாடலின் காப்பிதான். இதுல அந்த பாட்ட குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தியதற்கு இளையராஜா காப்பி ரைட்ஸ் கேக்குறாரு என நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.