மேடையில் அடம்பிடித்த இளையராஜா… அதட்டிய எம்.ஜி.ஆர்.. அட அவரு அப்பவே அப்படித்தான்!…
தமிழ் சினிமாவின் இசை போக்கை மாற்றியவர் இளையராஜா. எம்.எஸ்.விஸ்வநாதன் தமிழ் சினிமாவில் மெல்லிசையை கொடுத்து கொண்டிருந்த போது தமிழகத்தில் பலரும் ஹிந்தி பாடலை கேட்டு வந்தனர். ஆனால், இளையராஜா வந்த பின் தமிழ்நாட்டின் நாட்டுப்புற இசையை கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். அவரை நம்பித்தான் பல திரைப்படங்கள் உருவானது. பல மொக்கை படங்களை கூட அவரின் பாடல்கள் ஓட வைத்த காலம் அது. அதனால்தான் ராஜாவாக இருந்தார் இசைஞானி. ஏறக்குறைய 20 வருடங்கள் அவரை யாராலும் அசைக்க முடியைவில்லை.
அதேநேரம் அவரின் சுபாவத்தை எல்லோராலும் சகித்து கொள்ள முடியாமலும் இருக்கிறது. அதனால்தான் பாரதிராஜா, வைரமுத்து, பாலச்சந்தர், மணிரத்னம்,மிஷ்கின் உள்ளிட்ட பலரும் அவரிடமிருந்து பிரிந்தனர். இளையராஜா தனக்கு தோன்றியதை அதன் பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் பேசிவிடுவார். அங்குதான் சர்ச்சை எழுகிறது. யார் சொன்ன சொன்னாலும் எனக்கு கவலையில்லை என வாழ்பவர் ராஜா. அதேபோல் அவர் ஒன்றை முடிவு செய்துவிட்டால் யாருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டார்.
இளையராஜாவுக்கு மூகாம்பிகை கடவுள் மீது நம்பிக்கை ஏற்பட்டு அதன் மூலம் ரமண மகரிஷியை தன்னுடைய குருவாக ஏற்றுக்கொண்டவர். அதனால் கையில் வாட்ச், மோதிடம் மற்றும் கழுத்தில் செயின் என எதையும் ராஜா அணியமாட்டார். இது பல வருடமாகவே தொடர்கிறது. யாருக்காகவும் அதை மாற்றிக்கொள்ள மாட்டார்.
பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சி திரைப்படம் ஹிட் அடித்து வெள்ளி விழா கொண்டாடிய போது ஒரு விழா எடுக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டு அப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு கேடயம் கொடுத்தார். அவர்கள் எல்லோருக்கும் பாக்கியராஜ் மோதிரம் அணிவித்தார். ஆனால், இளையராஜாவுக்கு பாக்கியராஜ் மோதிரம் அணிவித்தபோது ராஜா வேண்டாம் என மேடையிலேயே மறுத்தார். இதைக்கண்ட எம்.ஜி.ஆர் ராஜாவை அதட்டினார். எனவே, வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொண்டாலும் பாதி விரலில் மோதிரம் நுழைந்த போதே அதை கழட்டி உடனே பாக்கியராஜின் கையில் கொடுத்துவிட்டார் இளையராஜா. இது எம்.ஜி.ஆருக்கே கோபத்தை ஏற்படுத்தியது.
அந்த சம்பவம் நடந்து பல வருடங்களுக்கு பின் ஒரு மேடையில் இளையராஜாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு மோதிரத்தை அணிவித்தார். உடனே அதை கழட்டி ரஹ்மான் விரலிலேயே ராஜா மாட்டிவிட்ட சம்பவமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வசந்தபாலன் சொன்னது உண்மை கிடையாது..-இந்தியன் படத்தின் உண்மை நிலையை விளக்கிய பத்திரிக்கையாளர்!..