இயக்குனர் சுந்தர்ராஜன் செஞ்ச வேலை!.. கடுப்பாகி இசையமைக்க மறுத்த இசைஞானி...

by சிவா |   ( Updated:2023-02-15 05:29:23  )
ilayaraja
X

ilayaraja

இசைஞானி இளையராஜா கோபக்காரர் என்பது திரையுலகில் எல்லோருக்கும் தெரியும். அவருக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை எனில் அந்த படத்திற்கு இசையமைக்க மறுத்துவிடுவார். அதேபோல், படத்தில் அவருக்கு பிடிக்காத காட்சிகள் இருந்தாலும் இயக்குனரிடம் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார். இப்படி திரையுலகில் பல சம்பவங்கள் நடந்துள்ளது.

தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஆர். சுந்தர்ராஜன். இவர் கோவையை சேர்ந்தவர். இவர் இயக்கிய பட திரைப்படங்கள் 100 நாட்களுக்கும் மேல் ஓடியுள்ளது. பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், குங்கும சிமிழ், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு என பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை இயக்கியுள்ளார். பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.

sundar

sundar

சத்தியராஜை வைத்து இவர் இயக்கிய திரைப்படம் திருமதி பழனிச்சாமி. குழந்தைகளின் கல்வியை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் சுகன்யா, கவுண்டமணி என பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 1992ம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

thirumathi

ஆனால், இப்படம் உருவான போது இப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என இளையராஜா கோபமடைந்த சம்பவமும் நடந்தது. இப்படம் முடியும் போது ‘ஆயிரம் கோவில்களை கட்டுவதை விடவும், ஒருவருக்கு உணவளிப்பதை விடவும் ஒருவரை படிக்க வைப்பதே சிறந்தது. அதுவே தர்மம்’ என சுந்தர்ராஜன் கார்டு போட்டாராம்.

ilai

ilayaraja

இது இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை. கடவுள் இல்லாமல் என்ன நடக்கும்? என்ன இப்படி எழுதியிருக்கிறாய்?.. இதை மாற்று. இல்லையேல் இப்படத்திற்கு பின்னணி இசை அமைக்கமாட்டேன் என சொல்லிவிட்டாராம். அதன்பின், அதை மாற்றி வேறு மாதிரி சுந்தர்ராஜன் எழுதிய பின்னரே அப்படத்தின் பிண்ணனி இசையை முடித்துக்கொடுத்தாராம் இளையராஜா. இந்த தகவலை சுந்தர்ராஜனே ஒரு சினிமா விழாவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிட்டு படத்துக்கும் மேல!.. ஆதாம் ஏவால் டிரெஸ்ல அப்படியே காட்டும் தர்ஷா…

Next Story