தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு பிரவேசிக்கும் பிரபலங்கள் மத்தியில் இளையராஜாவுக்கு கிடைத்த அங்கீகாரம் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் பிரபல அரசியல் கட்சிக்கு பாரபட்சமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதை பற்றி நிறைய பத்திரிக்கைகளில் செய்திகளும் வெளிவந்தன.

கலை, அறிவியல், விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்பி. பதவி வழங்குவது ஒரு முறை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இசைத்துறையில் மாபெரும் சாதனை படைத்த இளையராஜாவுக்கு எம்.பி,பதவி வழங்கி கௌரவித்தது.
ஆனால் இந்த திடீர் பதவி குறித்து அரசியலில் சில சலசலப்பு இருந்தது. மேலும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் இவரை அந்த அளவுக்கு பெருமையாக கொண்டாட வில்லை. சொல்லப்போனால் பெரும்பாலான சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூட தெரிவிக்க வில்லை. ஆனால் சமீபத்தில் உதய நிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததை ஒட்டு மொத்த சினிமாவுமே கொண்டாடியது.
இதையும் படிங்க : ரஜினி வீட்டில் அமர்ந்து தர்ணா பண்ணிய விஜயகாந்த்… அட இப்படியெல்லாம் நடந்துச்சா!…
ஏன் ட்விட்டர், இன்ஸ்டா என அனைத்து சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தன. இளம் தலைமுறை நடிகர்களில் இருந்து மூத்த நடிகர்கள் வரை அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதைப் பற்றி சினிமா பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் கேட்டபோது உதயநிதி அமைச்சராக செயல்படுகிறார். ஆனால் இளையராஜா பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட அவருக்கு வாய்ப்பிருக்கிறதா? இல்லை அதற்கு அவகாசம் இருக்கிறதா ? என்று யோசித்து பாருங்கள். அதனால் கூட வாழ்த்துக்களை தெரிவிக்காமல் இருக்கலாம் இல்லையா ? என்று கூறினார்.
