பிடிக்காத படத்தில் இசையமைத்த இளையராஜா!.. சம்பளத்தில் கறாரா நின்ன சம்பவம்.. எமோஷன டச் பண்ணிட்டாருப்பா..
திரைத்துறையில் இசையில் ஒரு புதிய பரிணாமத்தை புகுத்தியவர் இசைஞானி இளையராஜா. இவரின் பாடல்கள் எல்லா வித உணர்வுகளுக்கும் மருந்தாக அமையும். அழுகை, சிரிப்பு, சோகம் என எந்த நிலையிலும் இவர் இசையில் அமைந்த பாடல்களை கேட்டாலும் மனதிற்கு ஏதோ ஒரு வித இனம் புரியாத ஃபீலிங்ஸை ஏற்படுத்தும்.
அதனாலேயே இன்றளவும் இசை ஜாம்பவானாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் படைப்பில் ஒரு காவியமாக வெளிவந்த படம் முதல் மரியாதை. இந்த படத்தி சிவாஜி, ராதா என யாருமே எதிர்பார்க்காத கோணத்தில் பாரதிராஜா வித்தியாசமான கதையில் சிவாஜியை வைத்து படம் எடுத்தார்.
அதுவரை பின்னனி இசை சேர்க்காத படத்தை போட்டுக் காட்டியிருக்கிறார். சிவாஜி உட்பட அவரது குடும்பத்திற்கும் படம் மிகவும் பிடித்துப் போக கிட்டத்தட்ட அரை மணி நேரம் பாரதிராஜாவை சிவாஜி பாராட்டியிருக்கிறார். மேலும் எப்பொழுதுமே பாரதிராஜா அவரின் வாழ்க்கையில் இரண்டு பேருக்கு முக்கியத்துவம் கொடுப்பாராம்.
ஒன்று பஞ்சு அருணாச்சலம், மற்றொன்று இளையராஜா, இவர்கள் இருவருக்கும் படத்தை போட்டுக்காட்டியிருக்கிறார் பாரதிராஜா. ஆனால் அவர்கள் இருவரும் படம் சுத்தமா நல்லா இல்லை, என்ன படம் எடுத்துருக்க? என்று மூஞ்சிக்கு எதிராக சொன்னதோடு இளையராஜா சில பல மாற்றங்களை கதையில் சொல்லி அதை பண்ணவும் சொல்லியிருக்கிறார்.
ஆனால் இந்த மாதிரி மாற்றங்கள் தனக்கு நெருக்கமானவர் சொன்னால் கேட்கக் கூடிய பாரதிராஜா இந்த தடவை முதல் மரியாதை படத்தில் கேட்கவில்லை. அந்த அளவுக்கு அந்தக் கதையில் அவர் நம்பிக்கை வைத்திருந்தது தான் காரணம். இருந்தாலும் பாரதிராஜாவிற்காக பிடிக்காத படத்தில் இசை போட்டாலும் உயிரைக் கொடுத்து அந்த படத்திற்கு இசையமைத்துக்கொடுத்தார் இசைஞானி.
இசையோடு அமைந்த படத்தை பார்த்துவிட்டு இசைஞானியை கட்டிபிடித்து கண்ணீரோடு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாராம் பாரதிராஜா. மேலும் அவருக்கு உண்டான சம்பளத்தை கொடுக்கும் முயற்சியில் இறங்க இளையராஜாவோ சம்பளமே வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் பாரதிராஜா எவ்ளவோ போராடியும் சம்பளத்தை வாங்க மறுத்துவிட்டாராம். ஏனெனில் முதலில் நான் பிடிக்காமல் தான் இந்த படத்திற்கு இசையமைத்தேன். அதனால் எனக்கு சம்பளமே வேண்டாம் என கூறிவிட்டாராம் இசைஞானி.