இளையராஜாகிட்ட நீங்க கேட்கணும்!.. நான் கேட்டேன் கொடுத்தார்!. இயக்குனர் பதிவு!…

by சிவா |   ( Updated:2025-04-21 05:26:36  )
ilayaraja
X

Ilayaraja: தான் இசையமைத்த பாடல்களை தன்னிடம் முறையாக அனுமதி பெறாமல் யாராவது தங்களின் படங்களில் பயன்படுத்தினால் அவர்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறார். அவர்தான் சம்பளம் வாங்கிவிட்டாரே.. காசு வாங்கி கொண்டுதானே பாடல்களுக்கு இசையமைத்தார். அதன்பின் அந்த பாடல்கள் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்.

அவர் அதை ஒரு ஆடியோ நிறுவனத்திடம் விற்றுவிட்டால் பாடல்களின் உரிமை அந்த நிறுவனத்திடமே இருக்கும் என பொதுவாக பலரும் சொல்வதுண்டு. அதோடு, இளையராஜாவுக்கு காசு ஆசை என்றெல்லாம் அவரை பிடிக்காதவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இளையராஜா எந்த விளக்கமும் கொடுப்பது இல்லை. அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை.

நான் முழுக்க ஆன்மிகத்திலும், இசைக்காகவும் என்னை அர்ப்பணித்துக்கொண்டேன் என பதில் சொன்னார். மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியானபோது அந்த படத்தில் குணா படத்தில் இளையராஜா இசையமைத்த கண்மணி அன்போடு காதலன் பாடலை பயன்படுத்தியிருந்தார்கள். அதற்கும் ராஜா நோட்டீஸ் அனுப்பினார்.

ilayaraja

அப்போதும் அவரை சிலர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இப்போது சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய 3 பாடல்களை படக்குழு பயன்படுத்தியிருந்தனர். இதற்காகவும் ராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ‘இளைராஜாவிடம் இல்லாத பணமா?.. அவரின் பாடல்களை அனுமதி வாங்கி பயன்படுத்த வேண்டும் என ராஜா நினைக்கிறார். இதை செய்வதில் என்ன பிரச்சனை?’ என சிலர் கேட்கிறார்கள்.

இந்நிலையில், நீலம், கண்ணாடி பொம்மைகள், உனக்குள் நான், லைட்மேன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ள வெங்கடேஷ் குமார் என்பவர் டிவிட்டரில் ‘மறுபடியும் படத்தின் 2ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இருக்கிறேன். இந்த படத்திற்காக சமீபத்தில் இளையராஜாவை சந்தித்து மறுபடியும் படத்தில் அவர் இசையமைத்த பாடல்களை பயன்படுத்த அனுமதி கொடுத்தேன். உடனே அனுமதி கொடுத்தார். இன்னும் சொல்லப்போனால் ஆசை அதிகம் வச்சி பாடலின் புது வெர்ஷனை அவர் உருவாக்கவிருக்கிறார்.

ராஜா சாரிடம் முறையாக அனுமதி வாங்க வேண்டும் என பெரிய நடிகர்கள் நினைப்பதில்லை. அதைத்தான் அவர் எதிர்பார்க்கிறார். இளையராஜா போன்ற ஜினியஸ்க்கு இதை செய்ய வேண்டியது நம் கடமை’ என பதிவிட்டிருக்கிறார்.

Next Story