எஸ்.பி.பிக்கு மாற்றாக மனோவை கொண்டு வந்த இளையராஜா!.. மாஸ்டர் பிளானா இருக்கே!...

by சிவா |
mano
X

#image_title

Singer Mano: இளையராஜாவின் இசையில் பல பாடல்களை பாடி ரசிகர்களை ரசிக்க வைத்தவர் மனோ. இளையராஜா இசையமைக்கிறார் எஸ்.பி.பி, மனோ, மலேசியா வாசுதேவன் அல்லது கே.ஜே.யேசுதாஸ் இவர்களில் யாரேனும் ஒருவர்தான் பெரும்பாலும் ஆண் குரலுக்கு பாடுவார்கள். அதேபோல், எஸ்.ஜானகி, சித்ரா உள்ளிட்ட சிலர் மட்டுமே பெண் குரலுக்கு பாடுவார்கள்.

மனோவின் சொந்த ஊர் ஆந்திரா. அவரின் நிஜப்பெயர் நாகூர் பாபு. நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் தெலுங்கில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார் பாபு. ஆனால், பெரிதாக கிளிக் ஆகவில்லை. எனவே, நடிகர்களுக்கு டப்பிங் கொடுக்கும் வேலை செய்ய துவங்கி அந்த துறையில் பிரபலமானார். அதற்கு காரணம் அவரின் அழுத்தமான குரல்.

mano

mano

மேலும், தெலுங்கு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக வேலை செய்தார். அவரின் வேலை பாடகர்களுக்கு பாட்டு சொல்லி கொடுப்பது. ஒருமுறை ஆந்திரா சென்ற எம்.எஸ்.விஸ்வநாதன் பாபு வேலை செய்யும் திறமையை பார்த்துவிட்டு அவரை சென்னைக்கு கூட்டிவந்தார். அதன்பின் சில வருடங்கள் அவரிடம் வேலை பார்த்தார் பாபு. ஆனால், தனக்கு பாட்டு பாட வாய்ப்பு கொடுங்கள் என அவர் எம்.எஸ்.வி-யிடம் கேட்டதே இல்லையாம்.

மேலும், இசை கச்சேரிகளில் எஸ்.பி.பி பாடும் பாடல்களை பாபு பாடி வந்துள்ளார். ஒருநாள் அதைக்கேட்ட இளையராஜாவுக்கு குரலை ஏன் நாம் பயன்படுத்தக்கூடாது என தோன்றியது. அப்போது ராஜாவின் இசையில் பல படங்களில் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் எஸ்.பி.பி. ஆனால், சில சமயம் எஸ்.பி.பி இசை நிகழ்ச்சியில் பாட போய்விடுவார். எனவே, அவரை போல குரலை கண்டுபிடிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தில் இருந்த இளையராஜா பாபுதான் அதற்கு சரியான நபர் என புரிந்துகொண்டர். அவரின் பெயரை மனோ என மாற்றினார்.

1987ம் வருடம் வெளியான் பூவிழி வாசலிலே படத்தில் வந்த ‘அண்ணே அண்ணே நீ என்னா சொன்னே’ பாடல்தான் மனோ பாடிய முதல் தமிழ் பாடல். அந்த பாடல் சூப்பர் ஹிட். அந்த குரல் ராஜாவுக்கு மிகவும் பிடித்துப்போனது. வேலைக்காரன் படத்தில் ரஜினியின் துவக்கத்தில் வரும் ‘வேலை இல்லாதவன்தான் வேலை தெரிஞ்சவன்தான்’ பாடலை கொடுத்தார் ராஜா.

Mano, SPB

அதன்பின் ரஜினி, ராமராஜன், பிரபு போன்ற நடிகர்களுக்கு தொடர்ந்து பல படங்களில் பாடினார் மனோ. ராமராஜன் மனோ பாடிய செண்பகமே செண்பகமே பாடல் பட்டிதொட்டியெங்கும் பாடியது. கரகாட்டக்காரன் படத்தில் வந்த ‘குடகு மலை காற்றில் வரும்’ பாடல் மனதை வருடும். செம்பருத்தி படத்தில் வரும் ‘பட்டுப்பூவே மெட்டுப்பாடு மற்றும் சலக்கு சலக்கு சேலை’ பாடல் சூப்பர் ஹிட். இப்போதும் இந்த பாடல்கள் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கிறது.

இப்போதும் மனோ பாடிய பல பாடல்களை எஸ்.பி.பிதான் பாடினார் என்றே பலரும் நினைப்பார்கள். அதேபோல், எஸ்.பி.பி பாடிய பல பாடல்களை மனோ என சிலர் குழப்பிக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அற்புதமாக பாடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் மனோ.

சினிமாவில் பாட துவங்கிய பின் 15 இந்திய மொழிகளில் இதுவரை 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடலை பாடியிருக்கிறார் மனோ. இதற்காக டாக்டர் பட்டமும் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

இதையும் படிங்க: என்னை அவமானப்படுத்தினார் எம்.எஸ்.வி! மறக்கவே மாட்டேன்! இளையராஜா சொல்றத கேளுங்க!..

Next Story