மைக்கை கொடுத்துட்டு போயிட்டே இருப்பேன்!.. விடுதலை பட விழாவில் கடுப்பான இளையராஜா..
நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது ‘விடுதலை’ பட ஆடியோ வெளியீட்டு விழா. இந்த விழாவிற்கு நடிகர் சூரி, விஜய்சேதுபதி, லலித், வெற்றிமாறன், என அனைவரும் கலந்து கொள்ள விழா நாயகன் இளையராஜாவும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
ஒரு வழியாக விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இழுத்துக் கொண்டே இருந்த விடுதலை படப்பிடிப்பு பல செட்யூல்களாக நடத்தப்பட்டு படத்தை முடித்து விட்டனர். படத்தில் சூரி தான் ஹீரோ என்று முதலில் கூறப்பட்டு வந்தாலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில்
நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது விடுதலை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. அப்போது இளையராஜாவை முதலில் பேச சொன்ன வெற்றிமாறனை ‘ நீ பேசி நான் பார்க்க வேண்டும்’என்று இளையராஜா கேட்டுக் கொண்டதன் பேரில் வெற்றிமாறன் முதலில் பேசத்தொடங்கினார்.
அவர் என்ன நினைத்தாரோ அப்படியே ட்யூனாக கொடுத்திருக்கிறார் இளையராஜா என்று வெற்றிமாறன் கூறினார். அவரை தொடர்ந்து பேசிய இளையராஜா இதுவரை 1500 படங்களுக்கு இசைமைத்திருந்தாலும் அந்த படங்களை தாண்டி விடுதலை படம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும்,
அந்தப் படங்களின் பாடல்களை விட விடுதலை படத்திற்கு அமைந்த பாடல்கள் மிகவும் தனித்துவம் வாய்ந்தது எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய இளையராஜாவை பேசவிடாமல் வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் கூச்சலிட்டு ஆரவாரம் செய்து கொண்டே இருந்தனர்.
இதனை பொறுத்துக் கொள்ளாத இளையராஜா ‘ நான் மைக்கை கொடுத்துட்டு போயிடுவேன், பேசமாட்டேன், ’என்று சொல்லியும் தொடர்ந்து சத்தம் போட்டுக் கொண்டே இருந்தார்கள். இதனால் கடுப்பான இளையராஜா ‘ நீ கத்துனா நான் எப்படி பேசுறது’ என்று சொல்ல பக்கத்தில் இருந்த சூரி, வெற்றிமாறன் ரசிகர்களை பார்த்து கத்தாதீர்கள் என சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.