Connect with us
ilayaraja

Cinema News

என் இசையிலிருந்து நீங்கள் தப்பவே முடியாது!. இளையராஜாவின் அசத்தல் பேட்டி!…

Ilayaraja: பண்ணைபுரத்திலிருந்து சென்னை வந்து பாட்டுக்கொரு தலைவனாக மாறியவர்தான் இசைஞானி இளையராஜா. சொந்த ஊரில் இருக்கும் போது டீன் ஏஜிலேயே இசையில் ஆர்வம் கொண்ட இளையராஜா தனது அண்ணன் பாஸ்கர், சகோதரர் கங்கை அமரன் ஆகியோரோடு சேர்ந்து கம்யூனிச மேடைகளில் பாடிக்கொண்டிருந்தார்.

அதன்பின் சென்னை வந்து தன்ராஜ் மாஸ்டரிடம் இசையை கற்றுக்கொண்டார். சில இசையமைப்பாளர்களிடமும் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறார். அதன்பின் இசையமைப்பாளராக வேண்டும் என முயற்சி செய்து வாய்ப்பு தேடினார். வாலிப வயதில் இருந்த ஒருவரை இசையமைப்பாளராக யாரும் ஏற்கவில்லை.

இதையும் படிங்க: Ilayaraja: நீங்க பண்றது சரியில்ல!.. இளையராஜாவிடம் கோபப்பட்ட கமல்!.. விஷயம் இதுதான்!…

கதாசிரியர் பஞ்சு அருணாச்சலம்தான் இளையராஜாவை நம்பி அன்னக்கிளி படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்து 80களில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறினார்.

இளையராஜா பாடல்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இப்போதும் பலரும் அவரின் இசையைத்தான் கேட்டு ரசித்து வருகிறார்கள். 70 மற்றும் 80களில் பிறந்தவர்கள் இளையராஜாவின் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். இளையராஜாவின் இசை மகிழ்ச்சி, நிம்மதி, ஆறுதல் என எல்லாவற்றையும் கொடுக்கிறது.

மனபாரத்திற்கு மருந்து போடுகிறது அவரின் இசை. அவருக்கு பின் ரஹ்மான், தேவா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் வந்து இப்போது அனிருத் காலமாக மாறிவிட்டது.. ஆனாலும், இளையராஜாவின் பாடல்கள் இப்போதும் எல்லோராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் ‘உங்கள் இசையை விரும்பும் ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?’ என்கிற கேள்வி இளையராஜாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு ‘என்னோடே எப்போதும் இருக்கிறீர்கள். நீங்கள் என்ன வேலை வேண்டுமானாலும் செய்யுங்கள்.. டாக்டரோ, இன்ஜினியரோ, கல்லூரி மாணவர்களோ.. உங்களை தொடர்ந்து வருவது என் இசை மட்டுமே என்பது உங்களுக்கு தெரியும்.

‘உங்கள் இசையை நான் கேட்டதில்லை.. என் அப்பாதான் கேட்கிறார்’ என்றெல்லாம் சொல்லி நீங்கள் தப்பிக்க முடியாது. என் இசையை நீங்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும். உங்களின் தனிமையில் உங்களுக்கு ஆறுதல் தருவது என் இசை மட்டுமே. அதற்காகவே என்னை இறைவன் படைத்திருக்கிறான். நான் உருவாக்கும் இசை என்னுடயது இல்லை. அது உங்களுடையது’ என பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: இந்தி சினிமாவின் ஆதிக்கத்தை விரட்டி அடித்த இளையராஜா… எப்படின்னு தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema News

To Top