முதல் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு!.. இளையராஜா அதை எப்படி செக் பண்ணார் தெரியுமா?!..
Ilayaraja: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இப்போதும் இருப்பவர் இளையராஜா. 70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து தனக்கென் ஒரு தனி இடத்தை பிடித்தவர் இவர். இவரின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. அதற்கு காரணம், அவருக்கு முன்னால் வந்த இசையமைப்பாளர்களின் பாடல்களில் இல்லாத மண் வாசனை ராஜாவின் பாடலில் இருந்தது.
இளையராஜாவின் மெட்டு மிகவும் எளிமையாக இருந்ததால்தான் அது எல்லோரிடமும் சென்று சேர்ந்தது. அதேபோல், அவரின் பாடலில் இருந்த லயமும், இனிமையும் எல்லோரையும் சுண்டி இழுத்தது. மண் வாசனை மிக்க கிராமத்து இசை இளையராஜாவின் பாடல்களில் தவழ்ந்து வந்தது.
இதையும் படிங்க: தேவாரா புரோமோஷனில் அசிங்கப்பட்ட அனிருத்! இந்த அவமானம் தேவையா?
எனவே, குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடம் பிரபலமாகினார் இளையராஜா. 80களில் வெளிவந்த 80 சதவீத தமிழ் திரைப்படங்களுக்கு அவர்தான் இசை. தினமும் 3 படங்களுக்கு இசையமைப்பார் இளையராஜா. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ஒரே நாளில் பின்னணி இசையமைத்துவிடுவார்.
இசை ரசிகர்களால் இப்போது வரை சிலாகிக்கப்படும் பல படங்களின் பாடல்கள் எல்லாம் 2 மணி நேரத்தில் மெட்டமைத்து அன்று மாலையே அவர் பதிவு செய்த பாடல்கள்தான். குணா, சின்னத்தம்பி, தளபதி, செம்பருத்தி, சின்னக்கவுண்டர் போன்ற படங்களுக்கு இசையமைக்க இளையராஜா எடுத்துக்கொண்ட் நேரம் 2 மணி நேரங்கள்தான்.
பொதுவாக சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது என்பது சுலபமில்லை. இளையராஜாவும் பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு போனார். ஆனால், யாரும் அவரை நம்பவில்லை. கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம்தான் இளையராஜாவிடம் இருந்த திறமையை கண்டுபிடித்தார். அப்படி இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமான படம்தான் அன்னக்கிளி.
அன்னக்கிளி படம் ரிலீஸான நேரத்தில் கடலோரத்தில் வாக்கிங் போவது இளையராஜாவின் வழக்கம். அப்போது ரேடியோவில் அன்னக்கிளி பாடல் போடுவார்களாம். எப்போது பாடலை போடுகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு அருகில் உள்ள தெருக்களில் ஒவ்வொரு வீடாக ரேடியோவை ஆன் செய்வார்களாம். இதைக்கேட்டுக்கொண்டே வாக்கிங் போவாராம் இளையராஜா. அப்போதெல்லாம் நம் பாடல்கள் மக்கள் ஏன் இப்படி ரசிக்கிறார்கள்?.. அதற்கு என்ன காரணம்? என யோசித்துக்கொண்டே நடப்பாராம்.
இதையும் படிங்க: சிறுவனை சரியாக கணித்த அஜித்! உடனே 5 லட்சத்தை கொடுத்து பிரமிக்க வைத்த தல