முதல் படத்தையே முடிக்க முடியாமல் கஷ்டப்பட்ட இயக்குனர்!.. கை கொடுத்த இளையராஜா!.. என்ன மனுசன்யா!.

அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அவரது முதல் படத்தில் துவங்கி அவர் இசையமைத்த பாடல்கள் எல்லாம் பெரும் ஹிட் கொடுத்தன.
இதையும் படிங்க:நான் செஞ்ச வேலையால் அண்ணாவும், அப்பாவும் வீட்டை விட்டே போயிட்டாங்க!.. நளினி வாழ்வில் இவ்வளவு சோகமா!..
இதனையடுத்து மக்கள் மத்தியிலும் கூட இளையராஜாவின் இசைக்கு அதிக வரவேற்பு வர துவங்கியது. இந்த நிலையில் இயக்குனர்களே இளையராஜாவின் இசைக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் எல்லாம் இளையராஜாவிடம் இசையை பெறுவதற்காக இயக்குனர்கள் எல்லாம் அவர் ஸ்டுடியோவிற்கு வெளியே வரிசை கட்டி நிற்பார்களாம்.
இதனால் இளையராஜா இயக்குனர்களுக்கு பெரிதாக மதிப்பு கொடுக்க மாட்டார் என்றெல்லாம் அவர் குறித்து பேச்சுக்கள் இருந்தாலும் அப்போதைய சமயத்தில் கூட அவர் பலருக்கும் நன்மைகள் செய்துள்ளார் என சில தகவல்கள் கிடைக்கின்றன. இளையராஜாவே ஒரு பேட்டியில் கூறும்போது மணிரத்தினத்திற்கு அவர் எவ்வளவு நன்மை செய்துள்ளார் என்பதை கூறியிருந்தார்.
இதையும் படிங்க:அரவிந்த்சாமிக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்த நடிகை! அண்ணன் மவுசு தெரிஞ்சும் யாருப்பா அந்த நடிகை?

paneer
அதே போல இயக்குனர் வாசுவிற்கும் அதிக நன்மைகளை செய்துள்ளார் இளையராஜா. இயக்குனர் பி.வாசுவும், சந்தான பாரதியும் இணைந்து இயக்கிய திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள். ஏற்கனவே பி.வாசுவிற்கு இளையராஜாவுடன் பழக்கம் என்பதால் பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்திற்கு இலவசமாகவே இசையமைத்து கொடுத்தார் இளையராஜா.
அதே போல அந்த படத்தின் இறுதி காட்சிகளை முடிக்க காசு இல்லாமல் பி.வாசு நின்றபோது அவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார் இளையராஜா.
இதையும் படிங்க:அஜித்துக்கு அத கத்து கொடுத்ததே நான்தான்! வித நான் போட்டது – சீக்ரெட்டை பகிர்ந்த ரோபோ சங்கர்