எல்லா காலங்களிலும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இளையராஜா அதன் பிறகு எக்கச்சக்கமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அப்போது இளையராஜாவின் இசைக்காகவே அந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்க மக்கள் தயாராக இருந்தார்கள். இதனாலேயே நடிகர் ராஜ்கிரண் தனது திரைப்படங்களின் போஸ்டர்களிலேயே இளையராஜாவின் போட்டோவைதான் பெரிதாக வைப்பாராம்.
இந்த காரணத்தாலேயே இயக்குனர்கள் பலரும் இளையராஜாவை தங்களது திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று நினைத்தனர். இதற்காக இளையராஜாவின் ஸ்டுடியோ வாசலில் இயக்குனர்கள் நின்று கொண்டிருப்பார்கள் என்று பலரும் கூறுவது உண்டு.
இயக்குனரும் நடிகருமான மனோபாலா படம் இயக்கத் துவங்கிய பொழுது அவரது திரைப்படங்களுக்கும் இளையராஜாவே இசையமைக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் இளையராஜாவை நேரில் சென்று அப்படி யாரும் பார்த்துவிட முடியாது, இளையராஜா கார் செல்லும் வழியில் இதற்காக இயக்குனர்கள் அவர் கண் படும்படி நிற்பது வழக்கம்.
மனோபாலாவும் அதேபோல சென்று இளையராஜா கண்ணில் படும்படி நின்று கொண்டிருந்தார். ஆனால் பாரதிராஜாவிடம் பணி புரியும் நபர்களிடம் மிகவும் மரியாதையுடன் இருப்பவர் இளையராஜா, அவர் மனோபாலா அங்கு நிற்பதை பார்த்த உடனே ”அவர் பாரதிராஜாவிடம் பணிபுரிபவர் தானே ஸ்டுடியோவிற்கு வர சொல்லுங்கள்” என்று கூறினார்.
ஸ்டுடியோவிற்கு வந்த மனோபாலாவிடம் நீங்களும் மற்றவர்களும் ஒன்றா எதற்காக இப்படி போய் என் பார்வையில் படும்படி நிற்கிறீர்கள். இனி ஒருமுறை இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று வார்னிங் கொடுத்துள்ளார். இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…