வாய் ஓவரா தான்… ஆனா இந்த விஷயத்துல இளையராஜாவ அடிச்சிக்கவே முடியாது…

Ilayaraja: தற்போதைய கோலிவுட்டின் டாக் ஆஃப் தி டவுனே ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரியில் நடந்த களேபரங்கள் தான். அவர் ஒரு பக்கம் பிரச்னை பற்றி எரியும் போது தைய்ய தக்கா என பாடிக் கொண்டிருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் மீது தீவிர ரசனை வைத்து இருந்த அத்தனை பேரும் டிக்கெட்டினை புக் செய்து காத்திருக்க மழை வந்து நிகழ்ச்சியை கெடுத்துவிட்டது.

இதையும் படிங்க: லோகேஷ் என்னங்க படம் பண்றாரு!.. எல்லாமே ஸ்டன்ட் மாஸ்டர் தான்!.. ஓப்பனா சொன்ன பிரபலம்!..

ரத்தான நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு முன்னர் நடத்தினர். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஓ.எம்.ஆர் சாலைகளில் தான் நடக்கும். ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி மிகப்பெரிய பிரபலத்தின் நிகழ்ச்சியை ஈ.சி.ஆரில் நடத்தியதே முதல் தவறாக பார்க்கப்படுகிறது. மெட்ரோ பணி நடக்கும் இடம் என்பதால் ட்ராபிக் நெருசல் அதிகமானது.

இங்கே தொடங்கிய கோளாறுகள் எல்லா இடங்களிலும் பிரதிபலித்தது. இத்தனை சிக்கல்கள் நடக்கும் போது ஏ.ஆர்.ரஹ்மான் அதை கண்டுக்காமல் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். இதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியின் வருமானத்தில் இருந்து அவருக்கு ஒரு ஷேர் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: அவன் பொருள எடுத்து அவனையே போடணும்… லியோ வசூலுக்கு பிள்ளையார் சுழி போட்ட படக்குழு!

ஆனால், தமிழ்நாட்டிலேயே இதுவரை நிறைய முறை இசை கச்சேரி நடந்து இருக்கிறது. அதிலும் இளையராஜா நடத்திய எந்த கச்சேரிகளிலும் எதுவுமே பிரச்னை ஏற்பட்டது இல்லை. ஏனெனில், அவர் நிகழ்ச்சி பேச்சு வார்த்தை நடக்கும் முன்னரே ரசிகர்களை எப்படி உட்கார வைக்க வேண்டும்.

எதை செய்யவே கூடாது? என பல கண்டிஷன்களை போட்டு விடுவாராம். நிகழ்ச்சி நடக்கும் போது எதுவும் பிரச்னை எனக் காதுக்கு வந்தால் அந்த நிமிடமே நிறுத்தியும் விடுவாராம். காசு கொடுத்து அவங்க நிம்மதியா பார்க்க வேண்டாமா என கடிந்து கொள்வாராம். அடிக்கடி பேசியே சர்ச்சையில் சிக்கும் ராஜா எப்பையுமே ரசிகர்கள் விஷயத்தில் தங்கமுங்க எனப் பாராட்டி வருகின்றனர்.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it