இப்படி நான் எவனுக்கும் செஞ்சதில்லை!.. சூரியை அழ வைத்த இளையராஜா.. நடந்தது இதுதான்!..

சினிமாவில் போராடி ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சூரி. துவக்கத்தில் ஹீரோவின் நண்பர்கள் கூட்டத்தில் ஒருவராக நடித்தார். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இவருக்கு கிடைத்த பரோட்டா சாப்பிடும் போட்டி நடைபெறும் காட்சி இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது.

ஒருகட்டத்தில் விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். சில படங்களில் சோலோ காமெடியும் செய்தார். அப்படி அவர் நடித்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வேதாளம் போன்ற சில படங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தது.

இதையும் படிங்க: திடீரென ஓடிவந்த மனோபாலா!.. கடுப்பாகி திட்டிய இளையராஜா!.. மோகன்தான் காரணமாம்!…

இந்நிலையில்தான் வெற்றிமாறனின் இயக்கிய விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்தார் சூரி. வழக்கமான ஹீரோ போல இல்லாமல் கதையின் நாயகனாக நன்றாகவே நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் சூரி நடித்து முடித்துவிட்டார்.

ஒருபக்கம் கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிக்குமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் கருடன் படத்தில் சூரி ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இதையும் படிங்க: இயக்குனர் மட்டும்தான் திரைக்கதை அமைப்பாரா? இளையராஜாவின் சோகப்பாடலில் இத்தனை புதுமையா?

படம் வெளியாகி 3 நாட்களில் தமிழகத்தில் இப்படம் 18 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் வெற்றி சூரியை உற்சாகப்படுத்தி இருக்கிறது. எனவே, இனிமேல் காமெடி வேடத்தில் நடிக்க மாட்டேன் எனவும் அவர் சொல்லிவிட்டார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சூரி ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துகொண்டார்.

soori

இளையராஜா சார் புது ஸ்டுடியோ துவங்கிய அன்றே விடுதலை படத்திற்கான பூஜை அவரின் அலுவலகத்திலேயே நடந்தது. அப்போது ஒரு பாட்டுக்கு டியூன் போட்டார். அப்போது ‘45 வருட அனுபவத்தில் நான் இதுவரை ஹீரோவை அருகே உட்கார வைத்துகொண்டு டியூன் போட்டது இல்லை. உனக்கு மட்டும்தான் இது நடந்திருக்கிறது. என்ன ஹீரோ சார்?. ஆரம்பிக்கலாமா?’ என கேட்டார். நெகிழ்ச்சியில் நான் அழுதே விட்டேன். அப்போது அவர் போட்ட பாட்டுதான் வழி நெடுக காட்டுமல்லி பாடல்’ என சூரி பேசியிருந்தார்.

Related Articles
Next Story
Share it