ஆரம்பமே பிரச்னையா? இன்னும் தனுஷும், அருண் மாதேஸ்வரனும் என்ன செய்ய காத்திருக்காங்களோ?

Ilayaraja: இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் ஆரம்பமே பிரச்னையாகி இருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் அதிகரிக்கும் நிலை உருவாகிவிட்டது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் திரைப்படம் இளையராஜா. பல மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்த இந்த செய்தி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இளையராஜா இசையமைப்பை செய்ய இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல், ரஜினி மற்றும் கமல்ஹாசன் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பார்கள் எனவும் கிசுகிசுக்கின்றனர்.

இதையும் படிங்க: காதலே காதலே என்னை உடைத்தேனே… கண்ணில் காதல் பொங்க மனைவியுடன் அஜித்… லீக் வீடியோ!

இப்படத்தின் வேலைகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை எழுத இருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதை தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.

அந்த போஸ்டரில், சென்ட்ரல் ஸ்டேஷன், சேறு சகதியான சாலையில் தூரத்தில் இளையராஜா நிற்பது போல வடிவமைக்கப்பட்டு இருந்தது. அந்த போஸ்டர் தான் தற்போதையை பிரச்னைக்கு காரணமாகி இருக்கிறது. அதாவது இளையராஜா வந்த 70களில் தார்சாலை இருந்ததாம்.

இதையும் படிங்க: போனிலேயே பாட்டு வரிகளை சொன்ன கண்ணதாசன்!.. எம்.ஜி.ஆரின் மெகா ஹிட் பாட்டு அதுதான்!..

சகதி ரோடெல்லாம் இல்லையாம். அதுமட்டுமல்லாமல், மதுரையில் இருந்து வந்தவர் இளையராஜா. அதற்கு எக்மோர் ஸ்டேஷனை தானே காட்டி இருக்கவேண்டும். சென்டரல் ஸ்டேஷன் இருக்கு அப்போ கேரளாவில் இருந்தா வந்தாரு எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அவர் தனியாக வரவில்லையே எனவும் ரசிகர்கள் நுணுக்கமாக கேள்வி கேட்க தொடங்கி இருக்கின்றனர். இதனால் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கும். அந்த அடிப்படை ஆராய்ச்சி கூட செய்யாமல் அருண் மாதேஸ்வரன் இந்த போஸ்டரை வெளியிட்டு இருப்பதாக பிரபல விமர்சகர் ப்ளூசட்டை மாறன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

 

Related Articles

Next Story