Connect with us

Cinema News

இசை அமைப்பாளர் சங்கத்துக்கு துரோகம் செய்தாரா இளையராஜா?!.. நடந்தது இதுதான்!…

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானதால் இளையராஜா தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்தார். 80களில் உருவான 90 சதவீத படங்களுக்கு இசையமைத்தவர் இளையராஜாதான்.

இளையராஜா மிகவும் கோபக்காரர். பட்டென வார்த்தைகளை விட்டுவிடுவார். படங்களின் வெற்றிக்கு இளையராஜாவின் பாடல்கள் மிகவும் முக்கியம் என்பதால் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரை பொறுத்துக்கொண்டனர். அதேநேரம், இளையராஜாவுக்கு இன்னொரு முகமும் உண்டு. மிகவும் கஷ்டப்பட்டு படமெடுத்த சில தயாரிப்பாளர்களுக்கு இலவசமாகவே அவர் இசையமைத்து கொடுத்திருக்கிறார்.

இயக்குனர்கள் தன்னால் என்ன முடியுமோ அதை செய்துவிட்டு இறுதியாக இளையராஜாவை நம்பி விட்டிவிடுவார்கள். பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் பல மொக்கை படங்களையே அவர் ஓட வைத்திருக்கிறார். ஆனால், 90களில் ரஹ்மான், தேவா போன்ற புதிய இசையமைப்பாளர்கள் வந்தார்கள்.

ilayaraja

இதனால், இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்துபோனது. இளையராஜா பல வருடங்களாகவே பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒரு அறையில்தான் இசையமைத்து வந்தார். ஆனால், சில வருடங்களுக்கு முன்பு அங்கிருந்து அவரை பிரசாத் ஸுடியோ காலி பண்ண சொன்னது. இதை எதிர்த்து நீதிமன்றத்துக்கும் போனார் ராஜா. ஆனால், தீர்ப்பு அவருக்கு எதிராகவே வந்தது.

சினிமாவில் அவ்வளவு பெரிய இசையமைப்பாளராக இருந்தும் இசையமைப்பாளர் சங்கத்திற்கு அவர் எதுவும் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. சில வருடங்களுக்கு முன்பு ‘நான் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் பணத்தில் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டி தருகிறேன்’ என சொன்னார் ராஜா. இதனால், சங்கத்தின் தலைவர் தீனா மகிழ்ச்சியடைந்தார்.

அந்த இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தபின் தீனாவை சந்தித்து பேசிய ராஜாவின் உதவியாளர் ‘கட்டிடத்தின் மேலே இளையராஜா தனக்காக ஒரு ஸ்டுடியோ கட்டிகொள்ள ஆசைப்படுகிறார். அங்கிருந்தே அவர் இசைப்பணிகளை பார்ப்பார்’ என சொல்ல தீனா அதிர்ந்து போனாராம். ஏனெனில், அவருக்கு பின்னால் வரும் நிர்வாகம் ‘யாரை கேட்டு நீ இளையராஜாவுக்கு இடத்தை கொடுத்தாய்?’ என கேட்டால் என்ன சொல்வது’ என யோசித்த அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த இளையராஜா சங்கத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என வலைப்பேச்சு அந்தணன் ஊடகம் ஒன்றில் கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top