தாழ்த்தி பேசியவர்களுக்கு பாட்டு மூலம் பதிலடி கொடுத்த இளையராஜா… எப்படினு தெரியுமா?...

Ilayaraja: தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக இருப்பவர் இளையராஜா. தனது இசையின் மூலம் ஒட்டு மொத்த மக்களின் மனதையும் கொள்ளையடித்தவரும் கூட. கிராமத்தில் பிறந்த இவர் இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில் இசையமைப்பாளராக வலம் வந்தார்.

கிராமிய பாடல்களின் மூலம் சினிமா துறையையே ஆக்கிரமித்தார். பல நடிகர்களின் திரைப்பட வளர்ச்சிக்கு இவரின் பாடல்கள் மிகவும் முக்கிய பங்காற்றின. ஒரு காலத்தில் இவரது பாடல்கள் இல்லாத படங்களையே பார்ப்பது அரிதானது. அனைத்து இயக்குனர்களாலும் மிகவும் விரும்பப்பட்ட இசையமைப்பாளரும் கூட.

இதையும் வாசிங்க:விஜயகாந்துடன் அதிக படங்களில் நடித்த டாப் 10 நடிகைகள்!.. அசால்ட் பண்ணிய ராதிகா!..

ஆனால் இவர் சற்று ஆணவம் பிடித்தவரும் கூட. தனது பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் எவரும் பயன்படுத்தினால் அதற்கு தன்னிடம் அனுமதி பெறவேண்டும் என அவர் பல விதிமுறைகளை தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு இவர் புகழின் உச்சியில் உள்ளார்.

80,90களில் பல திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார். இவரின் பாடல் ஒலிக்காத இடம் என்பதே கிடையாது. சமீபத்தில் கூட விடுதலை திரைப்படத்தில் இவர் இசையமைத்த ‘வழிநெடுக காட்டுமல்லி’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் வாசிங்க:என்னதான் இருந்தாலும் அந்த குற்ற உணர்வு இருக்கும்ல? நடிகரிடம் வருத்தப்பட்டு பேசிய SK

இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படம் அன்னக்கிளி. இப்படத்தில் வரும் பாடல்கள் ஆரம்பத்தில் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அப்படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் சொல்ல சொல்ல அப்படத்தின் பாடல்கள் வெற்றி பெற ஆரம்பித்தது. ஆனாலும் ஒரு சிலர் இளையராஜாவின் பாடல்களை ஆரம்பத்தில் பெரிதளவில் ரசிக்கவில்லை. அவருக்கு கிராமத்திய இசை மட்டுமே வரும். கர்நாடக சங்கீதம் தெரியாது என்றனர்.

அதனால் இளையராஜா தன்னுடைய அடுத்த திரைப்படத்தில் தனது இசையை ரசிக்காதவர்களிடம் தன்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. அதனால் அவர் கவிக்குயில் திரைப்படத்தில் ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ எனும் பாடலுக்கு மிகச்சிறப்பாக இசையமைத்திருந்தார். மேலும் இப்பாடலுக்கு பாடகர் பால முரளிகிருஷ்ணாவைதான் பாட வைக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான இப்பாடல் மிகப்பெரிய வெற்றிப்பாடலாக அமைந்தது. தன்னை இகழ்ந்து பேசியவர்களுக்கு தனது பாடல்களின் மூலம் தக்க பதிலடி கொடுத்தார் இசைஞானி இளையராஜா.

இதையும் வாசிங்க:ஒரே நேரத்தில் அஞ்சா!… தாங்குவாரா உலக நாயகன்… ஜெட் வேகத்தில் வேலை செய்வதுக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

 

Related Articles

Next Story