Cinema News
27 வருடங்களுக்கு பின் ரஜினி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா…..
ரஜினிக்கு பல படங்களில் இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் இளையராஜா. ஆனால், பாட்ஷா படத்தின் போது ஏற்பட்ட சம்பள பிரச்சனையில் அப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா மறுக்கவே தேவா பக்கம் சென்றார் ரஜினி. தேவாவின் இசையில் பாட்ஷா, அண்ணாமலை பட பாடல்கள் ஹிட் அடித்தது.
அதன்பின் முத்து படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அப்பாடல்களும் செம ஹிட். அதன்பின் ரஜினி படத்திற்கு இளையராஜா இசையமைக்கவே இல்லை. ரஜினிக்கு கடைசியாக அவர் இசையமைத்த திரைப்படம் வீரா. அந்த படம் வெளியாகி 27 வருடங்கள் ஆகிவிட்டது.
இந்நிலையில், தற்போது ரஜினியும், இளையராஜாவும் இணையும் காலம் கசிந்து வந்துள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை பாலிவுட் பட இயக்குனர் பால்கி இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பால்கி இளையராஜாவின் தீவிர ரசிகர். அவர் இதுவரை இயக்கிய அனைத்து படங்களுக்கும் இளையராஜாதான் இசை அமைத்தார்.
ஒருவேளை பால்கி – ரஜினி கூட்டணி இணைந்தால் 27 வருடங்களுக்கு பின் ரஜினி நடிக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்க வாய்ப்பிருக்கிறது.