அந்த படத்துக்கு க்ளைமேக்ஸ்க்கு இளையராஜா மியூசிக்கே போடல... இவ்ளோ நாளா தெரியவே இல்லையே..

தமிழ் சினிமாவில் இசைஞானி, இசை அரசன் என அனைவராலும் புகழப்படுபவர் இளையராஜா. குறைந்த நேரத்தில் மிக அதிக பாடல்களுக்கு இசையமைக்கும் திறமையை கொண்டிருந்தார் இளையராஜா.
அதே சமயம் பல பிரபலங்களிடம் அவர் பகையை வளர்த்துக்கொண்டார். இயக்குனர் பாலச்சந்தருக்கும் இளையராஜாவிற்கும் பிரச்சனை ஆகியுள்ளது. அதே போல இயக்குனர் மணிரத்னத்திற்கும் இளையராஜாவிற்கும் கூட பிரச்சனை நடந்துள்ளது.

இதனால் பல பெரும் இயக்குனர்களுடன் பணிப்புரியும் வாய்ப்பை இழந்தார் இளையராஜா. விஜயகாந்த் திரைப்படத்திலும் கூட இந்த மாதிரியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 1990 ஆம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் புலன் விசாரணை.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைத்திருந்தார். இளையராஜாவிடம் இசையை வாங்க வேண்டும் எனில் முன்பே சொல்லி வைக்க வேண்டும். அவர் கொடுக்கும் நேரத்திற்குள் அவரிடம் இசையை பெற்றுக்கொள்ள வேண்டும்.
க்ளைமேக்ஸ்க்கு மியுசிக் இல்ல:
இந்த நிலையில் புலன் விசாரணை திரைப்படம் வந்த காலத்தில் இளையராஜாவிற்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்தன. அப்போது இளையராஜாவை பிடிப்பது என்பதே கடினமான காரியம் என்னும் நிலை இருந்தது.

ஒரு வழியாக இளையராஜாவிடம் வாய்ப்பை பெற்ற ஆர்.கே செல்வமணி அவரிடம் கேட்டு அனைத்து காட்சிகளுக்கும் இசையை வாங்கிவிட்டார். ஆனால் க்ளைமேக்ஸ் சண்டை காட்சிக்கு மட்டும் இளையராஜாவிடம் இசையை வாங்க மறந்துவிட்டார்.
பிறகு அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைக்க இளையராஜா சென்றுவிட்டதால் க்ளைமேக்ஸ் காட்சிக்கு என்ன செய்வது என யோசனையில் இருந்தது படக்குழு. பிறகு பெரிதாக இசையே இல்லாமல்தான் க்ளைமேக்ஸ் காட்சி படத்தில் இடம் பெற்றது.
இதையும் படிங்க: மணிமேகலை வெளியேறியதற்கு இதுதான் காரணமா?… விஜய் டிவி இப்படி ஒரு டிவிஸ்ட் வச்சிருக்காங்களே!!