கேட்டாலே இனிக்கும்… இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்… 90*s எவர்கிரீன் சாங்

by Giri |   ( Updated:2025-04-02 10:41:46  )
கேட்டாலே இனிக்கும்… இளையராஜா பகிர்ந்த சுவாரஸ்யம்… 90*s எவர்கிரீன் சாங்
X

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இசைஞானி இளையராஜா தளபதி படத்தின் பாடல் உருவான விதம் பற்றி கூறியிருந்தார். மணிரத்தினம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தளபதி. மகாபாரத கதையை அடிப்படையாக கொண்ட கதை கருவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்ணன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். எவர்கிரீன் படங்களில் முதன்மையான படம் இதுவென்றால் யாரும் மறுக்க முடியாது.

இப்படத்தில் வரக்கூடிய அடி ராக்கம்மா கையத்தட்டு பாடல் உருவான விதம் பற்றி இளையராஜாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது கேட்டாலே இனிக்கக்கூடிய ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அடி ராக்கம்மா கையத்தட்டு பாடல் பாம்பேயில் ரெக்கார்டிங் செய்யப்பட்டது. ஆடக்கூடிய குழுவினர்கள் எல்லாம் வந்தாச்சு ராஜா ஹீரோ இப்படி ஒரு கேரக்டர். இந்த பாட்டுக்கு நடுவுல ஹீரோயின் இண்ட்ரடியூஸ் ஆகுறாங்க. அப்போ தனித்துவமா அது தெரியணும் அதுக்கு ஏத்த மாதிரி சாங் ரெடி பண்ணிட்டீங்களா அப்படின்னு கேட்டார்.
அச்சச்சோ மறந்து போச்சு இந்த ஒரு நிமிஷம் ரெடி பண்ணிக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு என்னோட உதவியாளரை கூப்பிட்டேன்.

தேவாரம் திருவாசத்திலிருந்து ஒரு பாட்டை சொல்லு அப்படின்னு கேட்டேன். அவர் திடீர்னு குவித்த புருவமும் கோவை செவ்வாயில் புன் சிரிப்பும் என்ற பாடலை பாடினார் அதை அப்படியே ஒரு பேப்பர்ல எழுதுன்னு சொன்னேன். அதுதான் அந்த பாட்டோட நடுவில் வரும் வரிகள் பின் கை சொடக்கு போட்ட உடனே ராக்கம்மா கையத்தட்டு மாறும் என்று கூறினார். இந்த கம்போசிங் அரை மணி நேரத்தில் நடந்து முடிந்தது.

Next Story