இயக்குனரை ஸ்டுடியோவிலிருந்து விரட்டிய இளையராஜா!.. அட இந்த சின்ன காரணத்துக்கா?!..

by சிவா |
ilayaraja
X

ilayaraja

அன்னக்கிளி திரைப்படம் மூலம் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த இளையராஜாவின் பாடல்கள் அதன்பின் பல வருடங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டது. ஒருகட்டத்தில் இளையராஜாவின் இசை இல்லையேல் படத்திற்கு வெற்றியே இல்லை என்கிற நிலையும் உண்டானது. அவரின் பாடல்களுக்காகவே படங்கள் ஓடியது.

படத்தில் பெரிதாக கதையே இல்லை என்றாலும் இளையராஜாவின் பின்னணி இசையும், பாடல்களும் பல படங்களை வெற்றி பெற செய்தது. இதன் காரணமாக படத்தை காப்பாற்ற வந்த கடவுளாக இளையராஜா பார்க்கப்பட்டார். அவர் காலை பிரசாத் ஸ்டுடியோ வரும்போது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை பார்க்க வரிசையில் காத்திருப்பார்கள்.

ilayaraja

ilayaraja

ஆனால், காலங்கள் மாறியது. அவருடன் பயணித்த பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்களே வேறு இசையமைப்பாளர்களை தேட துவங்கினார். இதற்கு காரணம் இளையராஜா நடந்து கொள்ளும் முறைதான். குறிப்பாக அவர் காட்டும் கோபம்தான். அது அவரின் இயல்பான குணம் என்றாலும் எல்லாராலும் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஏ.ஆர் ரகுமான், தேவா, கீரவாணி, வித்யாசாகர், பரத்வாஜ், சிற்பி என பல இசையமைப்பாளர்கள் வந்தார்கள்.

இதன் காரணமாக இளையராஜா இசையமைக்கும் படங்களில் என்ணிக்கை குறைந்தது. ஆனால், இளையராஜா மீது அதீதமான பற்று வைத்திருந்த சில இயக்குனர்கள் தங்கள் படத்திற்கு அவர் மட்டுமே இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதில், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சானும் அடக்கம்.

raja

raja

தங்கர்பச்சான் இயக்கிய அழகி திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்தார். அப்படத்தின் பாடல்கள் பலரையும் அழ வைத்தது. சிலாகிக்க வைத்தது. பாடல்கள் மூலம் அப்படத்திற்கு பெரிய பலத்தை சேர்த்திருந்தார் இளையராஜா. அதன்பின் தங்கர்பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்திற்கு ராஜா இசையமைத்தார். அதோடு சரி அதன்பின் தங்கர்பச்சான் இயக்கிய 7 படங்களுக்கு ராஜா இசையமைக்கவில்லை.

thangar

thangar

ஒருமுறை இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு ஆண்கள் அணியும் சாட்ஸ் (டவுசர்) அணிந்து தங்கர்பச்சான் சென்றுள்ளார். அதைப்பார்த்து கோபமடைந்த ராஜா ‘என்ன உடை இது.. இந்த இடம் கோவில் மாதிரி.. இது போன்ற உடையணிந்து இங்கே வரக்கூடாது. இங்கிருந்து போ’ என அவரை விரட்டியுள்ளார். அதன் பின்னரே இளையராஜாவிடம் தங்கர்பச்சான் செல்வது இல்லை எனக்கூறப்படுகிறது.

அதேநேரம், ராஜாவின் மீதும் தங்கர்பச்சானுக்கு உள்ள அன்பும், மரியாதையும் இன்னமும் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இதெல்லாம் கீரவாணி இசையமைத்த பாடல்களா?.. தமிழிலும் முத்திரை பதித்த ஆஸ்கார் நாயகன்..

Next Story